ஓவியத்தை போல் காட்சியளிக்கும் அம்பாணி என்ற இடம் தரம்கர்ரில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்குள்ள மலைகள், அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளதால் புகைப்பட விரும்பிகளுக்கு இது ஒரு சிறந்த தலமாக விளங்கும்.
பல அறிய தாவர வகைகளையும் விலங்கின வகைகளையும் கொண்டுள்ள அம்பாணியில் சில அருவிகளும் கூட இருக்கின்றன. மலைகளுக்கு நடுவே உள்ள ஹலடிகுன்டி என்ற அழகிய பள்ளத்தாக்கில் இருந்து இந்த வட்டாரத்தின் அகலப் பரப்புக் காட்சியை கண்டு ரசிக்கலாம்.
இந்த இடத்திற்கு அருகில் அம்பாணி சரணாலயம் ஒன்றும் உள்ளது. இங்கே கருஞ்சிறுத்தை, புள்ளிமான்கள், சாம்பார் வகை மான்கள் போன்ற விலங்குகளை பார்க்கலாம். அடர்ந்த காடுகளுக்கு நடுவே புத்தராஜா கோவில் ஒன்றும் அமையப்பெற்றுள்ளது.
இயற்கை அன்னையோடு பொழுதை கழிக்க விரும்புபவர்களுக்கு ட்ரெக்கிங் செல்வது இனிய அனுபவத்தை கொடுப்பதோடு, ஒரு அழகான சுற்றுலாத் தலமாக இவ்விடம் விளங்குகிறது. பருவக்காலத்தின் போது நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் இந்த இடத்தின் அழகு இன்னமும் மேம்படும். அதனால் இக்காலத்தில் இங்கே வருவதே சிறந்ததாக இருக்கும்.



Click it and Unblock the Notifications