Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தரம்கர் » வானிலை

தரம்கர் வானிலை

செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரை தரம்கர்ரில் வானிலை குளுமையாக இருப்பதால் இந்நேரத்தில் இங்கு சுற்றுலா வருவதே உகந்ததாக இருக்கும். வெதுவெதுப்பான சூரிய ஒளியுடன் கூடிய குளிர் காற்று உங்களை நாள் முழுவதும் அலுப்பு தட்டாமல் ஊரை சுற்ற வைக்கும். குளிரில் நடுங்காமல் இருக்க சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு தேவையான வெதுவெதுப்பான துணிகளை எடுத்து வர வேண்டும்.

கோடைகாலம்

தரம்கர்ரில் ஏப்ரல் மாதம் தொடங்கும் கோடைக்காலம் ஜூன் வரை நீடிக்கும். இக்காலத்தில் இங்கு கடுமையான வெப்பம் நிலவுவதால் இங்கு இருப்பதே கடினமாக இருக்கும். தட்ப வெப்பநிலை அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடும். அதே போல் குறைந்தபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வரை கீழிறங்கும். நாள் முழுவதும் அனல் காற்று வீசிக்கொண்டே இருக்கும். அதனால் கோடைக்காலம் என்பது தரம்கர்ருக்கு சுற்றுலா வருவதற்கு தகுந்த காலம் கிடையாது.

மழைக்காலம்

ஜூன் கடைசியில் ஆரம்பிக்கும் மழைக்காலம் ஆகஸ்ட் வரை நீடிக்கும். செப்டம்பர் மாதத்தில் கூட சில நேரம் மழை பெய்யக்கூடும். மழை அதிகமாக பெய்வதால் இநேரத்தில் இங்குள்ள பல இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு விடும். இங்கு செப்டம்பர் மாதம் கொண்டாடப்படும் நுவக்காய் திருவிழாவும் ஒரு முக்கிய ஈர்ப்பாக விளங்குகிறது.

குளிர்காலம்

செப்டம்பர் கடைசியில் அல்லது அக்டோபர் ஆரம்பிக்கும் வேளை இங்கு தொடங்கும் குளிர் காலம் பிப்ரவரி வரை நீடிக்கும். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ் வரை கீழிறங்கும். பகல் நேரம் குளுமையுடன் இருக்கும். இரவு நேரம் இன்னும் குளிருடன் நடுங்கச் செய்யும். இக்காலத்தில் நெருப்பின் முன் அமர்ந்து மக்கள் குளிர் காய்வது வாடிக்கையாகும். அனைத்து சுற்றுலாத் தலங்களும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தால் நிறைந்திருக்கும்.