Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தர்மஷாலா » வானிலை

தர்மஷாலா வானிலை

தர்மஷாலாவிற்கு ஒரு பயணம் செய்ய விரும்பும் சுற்றுலா பயணிகள் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் வரை உள்ள கோடைகாலத்தின் போது இந்த இலக்கை பார்க்க வேண்டும். மலையேறுதல் இந்த பருவத்தில் பார்வையாளர்கள் மத்தியிலுள்ள பிரபலமான நடவடிக்கை ஆகும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன்): தர்மஷாலாவின் கோடை காலம்  மார்ச் மாதம் தொடங்கி ஜூன் வரை நீடிக்கும். இந்த பருவத்தில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 38 டிகிரி செல்சியஸ் மற்றும் 22 டிகிரியாக பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர்): தர்மஷாலா பருவ மழைக் காலத்தை ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை அனுபவிக்கிறது. ஜூலை மற்றும் ஆகஸ்டில் இங்கு கடுமையான மழை பொழிவதால், பயண இலக்கை அடைய சாதகமற்ற நிலை ஏற்படுகிறது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி): டிசம்பர் தர்மஷாலாவில் உள்ள குளிர்கால தொடக்கத்தை குறிக்கிறது. இந்த பருவம் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும். இப்பருவத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை -4 டிகிரியாக இருக்கும். அதோடு ஜனவரி மாதம் இங்கு பெய்யும் பனி மழை காரணமாக சாலைகள் பனிமூடி காணப்படும்.