Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தர்மபுரி » வானிலை

தர்மபுரி வானிலை

தர்மபுரிக்கு சென்று அங்கு தங்கி ஆலயங்களை தரிசித்து, சுற்றுலா தளங்களுக்கு சென்று இன்புற குளிர் காலம் ஏற்றதாக இருக்கும்.

கோடைகாலம்

ஏப்ரல் முதல் ஜூன் வரையுள்ள கோடை காலத்தில் தர்மபுரி மிகவும் வெப்பமாக இருக்கும். இந்த காலத்தில் தர்மபுரியின் வெப்ப நிலை 32 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

மழைக்காலம்

தர்மபுரியில் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலம் மழைக் காலம் ஆகும். இந்த காலத்தில் இங்கு மிதமான மழை அளவு இருக்கும். அதுபோல் வெப்பமும் மிதமான அளவில் இருக்கும். மழைக் காலத்தில் இங்கு மிதமான மழை அளவே இந்த காலத்தில் தர்மபுரிக்கு சென்று வரலாம்.

குளிர்காலம்

நவம்பர் முதல் பிப்ரவரி வரை தர்மபுரியில் குளிர் கால் நிலவுகிறது. இந்த காலத்தில் இங்குள்ள வெப்பநிலை 18 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். எனவே இந்த காலத்தில் தர்மபுரி சென்றால் மிக இனிமையாக இருக்கும்.