Search
  • Follow NativePlanet
Share

தேன்கனல் - சூரியன் முத்தமிடும் சிற்றூர்!

22

தலைநகரான புவனேஸ்வலிருந்து 99 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகிய இடம் தேன்கனல். தேன்கனலில் இயற்கை அழகை அள்ளி அளித்ததில் இயற்கைக்கு முக்கிய பங்கு உள்ளது. சூரியன் தழுவும் ஒரு சிற்றூராக விளங்கும் தேன்கனலில் வளமையான தாவர வகைகளையும் விலங்கினங்களையும் காணலாம். இதன் அழகே இதனை சுற்றியுள்ள மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் நதிகளில் அடங்கியுள்ளது.

தேன்கனல் அதன் அதர்ந்த பசுமையான காடுகளுக்காகவும் பெரிய வன விலங்குகளான புலிகள் மற்றும் யானைகளுக்காக அதிகம் அறியப்படும் இடம்.

இயற்கையை மீறி ஒரு கலைஞன் எங்கும் இல்லை என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது இந்த இடம். இதன் இயற்கை காட்சிகளுக்கு மத்தியில் மனிதனால் செய்யப்பட்ட சில அழகு கலைகளும் இதற்கு கூடுதல் அழகை சேர்க்கிறது.

தேன்கனல் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்

தேன்கனல் சுற்றுலா இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல புதையல்களை அளிக்கிறது; இங்கு அவ்வளவு ஈர்ப்புகள் உள்ளன. தேன்கனல் அதன் கலை மற்றும் சமயத்திற்கு அதிகம் முக்கியத்துவம் தரும் இடமாகும்.

அதனால் தான் இந்த மாவட்டத்தை சுற்றி சமயஞ்சார்ந்த இடங்கள் பல காணப்படுகின்றன. இங்கு அழகிய ஹிந்து கோவில்கள்களும் பல உள்ளன. அதில் அதிக புகழ் பெற்ற கோவிலாக விளங்குகிறது பாலபத்ரா கோவில்.

பாலபத்ரா கடவுளுக்காக 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலாகும் இது. இதே போல் இங்குள்ள சாம்புகோபால் கோவிலும் ஹிந்து பகதர்களால் அடிக்கடி வரப்படும் புகழ் பெற்ற கோவிலாக விளங்குகிறது.

ஸ்ரீ ராமருக்காக கட்டப்பட்ட ரகுநாத் கோவில் அதன் அழிகிய தோற்றத்துக்காக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இங்குள்ள பழமையான கோவிலான குனஜகண்ட கிருஷ்ணர் கோவில் இன்றும் கூட உலகத்தில் பல இடங்களில் இருந்து பக்தர்களை ஈர்க்கிறது.

சிவன் பெருமான் குடிகொண்டிருக்கும் கபிலாஷ், மஹிமா தர்மாவின் சமய தலைமையகமாக விளங்கும் ஜோரண்டா, பல ஹிந்துக் கோவில்களை கொண்டுள்ள கோலோ என இன்னும் சில சுற்றுலாத் தலங்களையும் கொண்டுள்ளது தேன்கனல்.

தேன்கனலிலிருந்து சிறிது தொலைவில் உள்ள சப்டசஜ்யா என்ற அழகிய இடத்தில் ஒரு ராமர் கோவில் உள்ளது. லடகடா என்ற இடம் தேன்கனல் சுற்றுலாவின் மற்றொரு புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது.

இங்கு சித்தேஷ்வர் கடவுளை மக்கள் வழிபடுகின்றனர். அனந்த் என்ற ராஜ நாகத்திற்கு அடியில் வீற்றிருக்கும் விஷ்ணு பகவானின் அழகிய சிற்பம் சாரங்கா என்றா இடத்தில் உள்ளதால், இதுவும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. தண்டாதர் என்ற இடம் அதன் அழகிய சுற்றுச் சூழலுக்காக சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் கவர்கிறது.

சுற்றுலாப் பயணிகளுக்கு சில தகவல்கள்!

தேன்கனல் நகரத்துக்கு விமானம், இரயில் மற்றும் சாலை வழியாக சுலபமாக வந்தடையலாம். புவனேஷ்வரில் உள்ள விமான நிலையம் தான் இதற்கு அருகில் உள்ள விமான நிலையமாகும்.

தேன்கனலுக்கு மிகவும் அருகில் இருக்கும் இரயில் நிலையம் கட்டக்கில் உள்ளது. இங்கிருந்து சிறிது தூரம் அல்லது தொலைதூர பயணங்களுக்கு டாக்சி சேவைகளையும் பயன்படுத்தலாம். அக்டோபர் முதல் டிசம்பர், மற்றும் பிப்ரவர் மற்றும் மார்ச் மாதங்களில் தேன்கனலுக்கு சுற்றுலா வருவதே சரியான நேரமாக இருக்கும்.

தேன்கனல் சிறப்பு

தேன்கனல் வானிலை

சிறந்த காலநிலை தேன்கனல்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது தேன்கனல்

  • சாலை வழியாக
    தேன்கனல் நாட்டிலுள்ள பிற இடங்களுடன் சில தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்திற்குள் சுற்ற மற்றும் அருகில் இருக்கும் நகரங்களுக்கு சென்ற வர குளிர் சாதன வசதியுடன் கூடிய டாக்சி அல்லது சாதாரண டாக்சிகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அதனால் சாலை வழியாக இங்கு பயணிப்பது ஒன்றும் அவ்வளவு சிரமமில்லை.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    தேன்கனலுக்கு அருகில் இருக்கும் இரயில் நிலையம் கட்டாக்கில் உள்ள சுறுசுறுப்பான இரயில் நிலையமாகும். கட்டாக் இரயில் நிலையத்திலிருந்து நாட்டின் உள்ள பல இடங்களுக்கும் இரயில் சேவை உள்ளது. தேன்கனலுக்கு வரவேண்டுமானால் கட்டாக் வரை ரயிலில் வந்து அங்கிருந்து பேருந்து அல்லது டாக்சி மூலமாக தேன்கனலுக்கு வரலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    தேன்கனலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் புவனேஷ்வரில் உள்ள பிஜு பட்நாயக் விமான நிலையமாகும். இந்த விமான நிலையத்திலிருந்து நாட்டிலுள்ள அனைத்து முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. கொல்கத்தா, டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத் மற்றும் விசாகபட்டணம் என அனைத்து நகரங்களுக்கும் சீரான விமான சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat