Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» திண்டுக்கல்

திண்டுக்கல் - உணவு மற்றும் கோட்டை நகரம்

23

இந்தியா முழுவதும் பூட்டு என்றாலே அது திண்டுக்கல் என்ற அளவிலே மிகவும் புகழ்பெற்ற நகரமான திண்டுக்கல், தெற்கே மதுரை மாவட்டத்தாலும், மேற்கே திருப்பூர் மற்றும் கேரளாவினாலும் சூழ்ப்பட்டுள்ளது. ‘திண்டு’ அதாவது ‘தலையணை’ மற்றும் ‘கல்’ ஆகிய இரண்டு வார்த்தைகள் சேர்ந்து திண்டுக்கல் என்றானது.அதாவது நகரத்தை நோக்கி காணப்படும் வெறுமையான மலைகளை  இது குறிக்கிறது.

பழனி மலை தொடருக்கும் சிறுமலை மலைத்தொடருக்கும் இடையே இந்நகரம் அமைந்துள்ளது மற்றும் விவசாயம் செய்வதற்க்கு ஏற்ற வளமான நிலத்தை பெற்றுள்ளது. திண்டுக்கல் நகரம் பிரியாணி நகரம், பூட்டு நகரம், ஜவுளி மற்றும் தோல்பதனிடும் நகரம் என்ற பல்வேறு பெயர்களில் பிரபலமானது.

திண்டுக்கல்லை சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

கம்பீரமான கோட்டையை தவிர, திண்டுக்கல் பகுதியில் சில கோயில்களும், புனித நதிகளும் பார்க்ககூடிய இடங்கள். திண்டுக்கல்லில் இருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பஞ்சம்பட்டி முக்கியமாக பார்க்க வேண்டிய இடம்.

அதோடு 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயத்துக்கும் நீங்கள் திண்டுக்கல் வரும் பொது சென்று வர வேண்டும். இதுதவிர கிறிஸ்து அரசர் ஆலயம், புனித ஜோஸப் தேவாலயம் போன்றவை இந்நகரின் மற்ற முக்கிய தேவாலயங்கள்.

கண்களுக்கு குளிர்ச்சி தரும் சிறுமலை மலை வாசஸ்தலம் திண்டுக்கல்-நத்தம் செல்லும் வழியில் உள்ளது. பெகாம்பூர் பெரிய பள்ளிவாசல், ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில், காசி விஸ்வநாதன் கோவில், காமாட்சியம்மன் தேவதானம்பட்டி, தாடிகொம்பு பெருமாள் கோவில், அபிராமி அம்மன் ஆலயம், ஆஞ்சனேயர் ஆலயம், ஆத்தூர் காமராசர் ஏரி, காமராசர் சாகர் அணை முதலியன திண்டுகல்லை சுற்றி அமைந்துள்ள பிராதான சுற்றுலா அம்சங்கள்.

இன்னொரு முக்கியமான கண்கவர் பகுதி வைகை, மருதை மற்றும் மஞ்சலாரு நதிகள் சங்கமமாகும் இடமாகும். மலையேறுபவர்கள் இந்நகரில் உள்ள சிறுமலையில் மலையேற்றத்தில் ஈடுபடலாம்.

மேலும் சின்னாளப்பட்டி, பயணிகளுக்கு பிடித்தமான மற்றொரு இடம். திண்டுக்கல் சமையல் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானது. திண்டுக்கல் அதன் பிரியாணிக்கு பேர்போனதால் அது பிரியாணி நகரம் என்ற பெயரிலும் பிரபலமாக அறியப்படுகிறது. எனவே திண்டுக்கல் வரும் பயணிகள் 'திண்டுக்கல் பிரியாணியை' சுவைத்திட மறந்துவிடக் கூடாது.

வரலாறுச் சிறப்பு

திண்டுக்கல் நகரின் மிக பிரபலமான வரலாற்று மைல்கல்  மலை மீது அமைந்துள்ள மலைக்கோட்டை ஆகும். இந்த  கோட்டையின் கட்டுமானப்பணி 1605ம் ஆண்டு  மதுரை மன்னர் முத்து கிருஷ்ணன் நாயக்கரால் தொடங்கப்பட்டு 1623 க்கும் 1659 க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

1755ம் ஆண்டு  ஹைதர் அலி, அவரது மனைவி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தானுடன் திண்டுக்கல் வந்தார்.  திப்பு சுல்தான் 1784 முதல் 1790 வரை இந்த கோட்டையில்  ஆட்சி செய்தார்.

1784 இல், திப்பு சுல்தானின் தளபதி இந்த கோட்டையில் பல அறைகள் கட்டி  சுவர்களை வலுப்படுத்தி புதுப்பித்தார். 1790 ம் ஆண்டு மைசூர் போரில் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டவுடன் இந்த கோட்டை ஆங்கிலேயருக்கு கீழ் வந்தது.

திண்டுக்கல்லை அடைவது எப்படி?

திண்டுக்கல்லுக்கு நெருங்கிய விமான நிலையம் மதுரை விமான நிலையம்  மற்றும் நெருங்கிய சர்வதேச விமான நிலையம் சென்னை ஆகும். திண்டுக்கல் ரயில் நிலையம்  பல தமிழ்நாடு நகரங்களை இணைக்கிறது. உள்ளூர் பயணத்திற்கு, ஆட்டோரிக்ஷாக்கள் மற்றும் டாக்சிகள் எளிதாக கிடைக்கின்றன.

திண்டுக்கல் வானிலை

கோடை காலத்தில் திண்டுக்கல் நகரம் வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்து காணப்படும். திண்டுக்கல்லை சுற்றி பார்க்க சிறந்த பருவங்களாக மழைகாலம் மற்றும் பனி காலங்கள்  அறியப்படுகின்றன. எனவே, திண்டுக்கல்லை செப்டம்பர் மற்றும் மார்ச் இடைப்பட்ட நாட்களில் சுற்றி பார்ப்பது மிகவும் சிறந்தது.

திண்டுக்கல் சிறப்பு

திண்டுக்கல் வானிலை

சிறந்த காலநிலை திண்டுக்கல்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது திண்டுக்கல்

  • சாலை வழியாக
    NH 7 மற்றும் NH 209 என்ற இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் திண்டுக்கல் வழியாக செல்கின்றன. திண்டுக்கல் நகருக்கு தமிழகத்தின் அனைத்து நகரங்களிலிருந்தும் எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    திண்டுக்கல் ரயில் நிலையம் சென்னை , கோயம்புத்தூர், மதுரை போன்ற தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. இது இந்நகரை சென்றடைய சிக்கனமான, எளிய மற்றும் வசதியான வழியாகும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    திண்டுக்கல் அருகில் உள்ள விமான நிலையம் நகரில் இருந்து 84 கிமீ தொலைவில் அமைந்துள்ள மதுரை விமான நிலையம் ஆகும். மதுரையிலிருந்து, திண்டுக்கல்லை அடைய டாக்ஸி அல்லது பேருந்தை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மதுரை விமான நிலையம் சென்னை விமான நிலையத்தோடு அடிக்கடி விமான சேவைகளின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat