திஸ்பூரின் சிறந்த கலாச்சார நிறுவனமான ஸ்ரீமன்தா சங்கர்தேவா கலாஷேத்ராவில் ஒரு கலை கண்காட்சி, திறந்தவெளி அரங்கம் மற்றும் பாரம்பரியமான வைணவ கோவில் ஆகியவை உள்ளன.
இம்மாநிலத்தின் கலாச்சார சிறப்பை பெருமைப்படுத்தும் நோக்கில் மாநில அரசாங்கத்தால் இந்த கலாச்சார நிறுவனம் 1990-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
பஞ்சாபாரியில் உள்ள இந்த கலாஷேத்ராவின் பெயர், நாட்டின் இந்த பகுதியில் வைணவத்தை பரப்பிய மதத்தலைவரான ஸ்ரீமன்தா சங்கர்தேவாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கலை கண்காட்சி மற்றும் பல பார்வையிடங்களுடன், சாகித்ய பவன் நூலகம் என்ற பெயரில் இங்கேயுள்ள நூலகத்தில் பழைய அஸ்ஸாமிய இலக்கியங்களை தாங்கியுள்ள ஓலைச்சுவடிகள் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன.
இவ்விடத்தில் கண்காட்சி நடத்தும் பொருட்டாகவே லலித் கலா பவன் என்ற இடமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லலித் கலா பவனில் கலை மற்றும் கலாச்சார கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.
எனினும், இவையெல்லாவற்றிற்கும் மேலாக செயற்கையாக வடிவமைக்கப்பட்டுள்ள அஸ்ஸாமிய கிராமம் ஒன்றும் சிகரம் வைத்தாற்போல பிரபலமான பார்வையிடமாக உள்ளது.



Click it and Unblock the Notifications