Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திஸ்பூர் » வானிலை

திஸ்பூர் வானிலை

கோடைகாலம்

திஸ்பூரில் மார்ச் மாதம் தொடங்கும் கோடைக்காலம் மே மாதம் வரையிலும் நீடிக்கும். இந்நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 38C ஆகவும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22C ஆகவும் இருக்கும். இந்நாட்களில் பருத்தி ஆடைகளை கொண்டு செல்வது நல்ல முன்னேற்பாடாக இருக்கும்.

மழைக்காலம்

திஸ்பூரில் மழைக்காலம் ஜுன் மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதத்தில் முடிவடைகிறது. இந்நாட்களில் வெப்பநிலை சற்றே குறைவாகவும், இடிமின்னல்களுடன் கூடிய கனமழையும் பொழியும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். இந்நாட்களில் வெப்பநிலை 30C –க்கும் குiறாக இருக்கும்.

குளிர்காலம்

டிசம்பர் மாதத்தில் தொடங்கும் குளிர்காலம் பிப்ரவரி மாதம் முடிவடையும். இந்நாட்களில் அவ்வப்போது பொழியும் மழைப்பொழிவினால் வெப்பநிலை குறைந்து 10C முதல் 25C வரை இருக்கும்.