Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தோடா » வானிலை

தோடா வானிலை

மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான மாதங்கள் தோடாவிற்கு சுற்றுலா வர மிகவும் ஏற்ற பருவமாகும். இவ்விடத்தின் இயற்கையழகை காண விரும்பும் சுற்றுலாப் பயணிகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் இங்கு சுற்றுலா வர வேண்டும். அதேபோல கோடைக்காலம் வெளியில் சுற்றி பார்த்து வர மிகவும் ஏற்ற காலமாகும்.

கோடைகாலம்

ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான கோடைக்காலத்தில் தோடாவின் வெப்பநிலை 18 டிகிரி முதல் 32 டிகிரி அளவில் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்நாட்களில் சுற்றுலாப் பயணிகள் மலையேற்றம் மற்றும் ஊர்சுற்றுதல் போன்ற வெளிப்புற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வசதியான பருவமான கோடைக்காலம் தோடாவிற்கு சுற்றுலா வர மிகவும் ஏற்ற பருவமாகும்.

மழைக்காலம்

ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலத்தில் மிகவும் குறைவான மழை பெறும் பகுதியாக தோடா உள்ளது. ஈரப்பதமான பருவநிலையை கொண்டிருந்தாலும், இரவுப் பொழுதுகள் மிகவும் குளிரானதாக மழைக்காலத்தில் இருக்கும்.

குளிர்காலம்

நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான குளிர்காலத்தில் தோடாவின் வெப்பநிலை குளுமையாக இருக்கும். இந்நாட்களில் பதிவு செய்யப்பட்ட மிகவும் குறைந்த வெப்பநிலையாக 4 டிகிரி மட்டுமே  உள்ளது. பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் இந்த பருவநிலையில் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் தோடா வருவதை விரும்புவதில்லை.