Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தும்கா » வானிலை

தும்கா வானிலை

அதிக ஈரப்பதம் தும்கா நகரத்தின் முக்கியமான பருவநிலை இயல்பாக உள்ளது. பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான பருவம் தும்கா நகரத்திற்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் சராசரியாக  16°C தொடங்கி 41°C வரையிலும் வெப்பநிலை உயந்து காணப்படுகிறது. அதிக வெப்பமும் ஈரப்பதமும் இக்காலத்தில் சுற்றுலா செயல்பாடுகளுக்கு ஒவ்வாத அம்சங்களாக காணப்படுகின்றன.  

மழைக்காலம்

ஜுலை முதல்  ஆகஸ்ட் வரை இப்பகுதியில் அதிக மழைப்பொழிவு நிலவுகிறது. மழைக்காலத்தில் வெப்பநிலை அதிகம் இருப்பதில்லை என்றாலும் சூழலில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்.

குளிர்காலம்

குளிர்காலத்தில் சராசரியாக1°C  வெப்பநிலையில் துவங்கி 28°C  வரை வெப்பநிலை நிலவுகிறது. இக்காலத்தில் பிப்ரவரி இறுதி வரை தும்கா பகுதியில் இனிமையான சூழல் நிலவுகிறது.