Search
  • Follow NativePlanet
Share

தும்கா – ஹிந்துக்களுக்கான ஒரு புனித நகரம்!

20

ஜார்கண்ட் மாநிலத்தின் பழமையான மாவட்டமான இந்த ‘தும்கா’ சந்தால் பர்காணா மண்டலத்தின் தலைநகரமும் ஆகவும் அமைந்துள்ளது. பழங்குடி மக்களின் பூமி எனும் பெருமையான அடையாளத்தை இந்த மாவட்டம் பெற்றிருக்கிறது. தும்கா மாவட்டம் முழுக்கவும் ரம்மியமான அழகுக்காட்சிகள் நிரம்பியதாகவே காட்சியளிக்கிற்து.

பிரம்மாண்டமான மலைகள், ஓவியம் போன்ற இயற்கை எழிற்காட்சிகள், அமைதியான ஆறுகள் மற்றும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரவிக்கிடக்கும் பள்ளத்தாக்கு பசுமைகள் என்று இங்கு இயற்கையின் அற்புதங்களை இந்த பூமி வாய்க்கப்பெற்றிருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 24 மாவட்டங்களில் ஒன்றாக தற்போது விளங்கும் இந்த  தும்கா மாவட்டம் ஆரம்பகால இந்தியாவில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் ஒன்றாக அறியப்பட்டிருந்தது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ‘டமின்-இ-கொ’ எனும் நிர்வாக மாவட்டமாகவும் இது அழைக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த தும்கா நகரம் ஜார்கண்ட் மாநிலத்தின் துணைத்தலைநகரம் என்று அழைக்கப்படும் அளவிற்கு ஒரு முக்கிய கேந்திரமாக வளர்ச்சியடைந்துள்ளது. மண் அரிப்பு மற்றும் இதர பாதகமான புவியியல் அம்சங்கள் காரணமாக இங்கு விவசாய உற்பத்தி குறைவாகவே உள்ளது.

தும்கா நகரம் மற்றும் மாவட்டத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சங்கள்

மலைகள், காடுகள் மற்றும் ஆறுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அற்புதமான சுற்றுலாக்காட்சிகளும் சிறப்பம்சங்களும் இந்த தும்கா மாவட்டத்தில் நிரம்பியுள்ளன. வடக்கிலிருந்து தெற்காக நீண்டிருக்கும் மலைத்தொடர்களை கொண்ட உயரமான பகுதியில் இந்த மாவட்டம் அமைந்திருக்கிறது.

நோனிஹாட் எனும் இடத்துக்கு அருகில் உள்ள லக்வா மலை அற்புதமான எழில் அம்சங்களுடன் ஒரு அமைதிப்பிரதேசமாக வீற்றிருக்கிறது. மலையேற்றப்பயணத்துக்கு உகந்த இந்த மலையின் உச்சிப்பகுதியிலிருந்து காணக்கிடைக்கும் எழிற்காட்சிகள் பிரமிக்க வைக்கும் அழகுடன் பரந்து கிடக்கின்றன. 

மேலும், தும்கா நகரத்துக்கு தென்கிழக்கே ராம்கர் மலைகளும் அமைந்துள்ளன. பிரசித்தமான யாத்ரீக ஸ்தலமாகவும் பிரசித்தி பெற்றுள்ள தும்கா நகரத்தில் பாபா பாசுகிநாத் தாம், மலூட்டி, பாபா சுமேஷ்வர் நாத் மற்றும் சுடோ நாத் கோயில்கள், மசான்ஜோர் தாம், கும்ராபாத், குர்வா அல்லது ஷிரிஷ்டி பார்க் போன்ற முக்கியமான ஆன்மீகத்தலங்கள் அமைந்திருக்கின்றன. மயூரக்ஷி என்றழைக்கப்படும் முக்கியமான ஆறு ஒன்றும் தும்கா நகரத்தின் வழியே ஓடுகிறது.

தும்கா நகரத்திற்கு விஜயம் செய்ய ஏற்ற காலம்

ஈரப்பதம் அதிகமாக காணப்படும் பருவநிலை இயல்பை தும்கா நகரம் பெற்றுள்ளது. கோடைக்காலம் அதிக வெப்பத்துடனும், குளிர்காலம் மிதமான இனிமையான சூழலுடனும் காணப்படும்.

பாகுர் நகரத்திற்கு எப்படி செல்லலாம்?

தும்கா நகரம் சாலை வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. ஜஸிதிஹ் எனும் இடத்திலுள்ள ரயில் நிலையம் மூலமாக இந்த தும்கா நகரத்துக்கு விஜயம் செய்யலாம். இந்த நகரத்திற்கான பிரத்யேக இருப்புப்பாதைக்கான  திட்டங்களும் தற்போது பரிசீலனையில் உள்ளன.

தும்கா சிறப்பு

தும்கா வானிலை

சிறந்த காலநிலை தும்கா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது தும்கா

  • சாலை வழியாக
    ஜார்கண்ட் மாநிலத்தின் முக்கிய நகரங்களுடன் நல்ல சாலை வசதிகளால் தும்கா நகரம் இணைக்கப்பட்டிருக்கிறது. மூன்று சக்கர வாகனங்கள் இந்த தும்கா நகரத்தில் அதிகம் காணப்படுகின்றன. பேருந்துகள் இங்கு முக்கியமான போக்குவரத்து வாகனங்களாக அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் வாகனங்கள் இந்த நகரத்திலிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர் சேவைகளை இயக்குகின்றன. கொல்கத்தா மற்றும் ராஞ்சி ஆகிய இரு நகரங்களுக்கும் இடையே அடிக்கடி மற்றும் இரவு நேரப்பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள சாலைகள் நன்கு பராமரிக்கப்பட்டு காட்சியளிப்பதும் குறிப்பிடத்தக்கது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ராஞ்சி மற்றும் ஜஸிதிஹ் ரயில் நிலையங்களிலிருந்து தும்காவுக்கு வரலாம். இந்த மாவட்டத்திற்கான பிரத்யேக இருப்புப்பாதைக்கான திட்டங்களும் தற்போது பரிசீலனையில் உள்ளன. பீஹார் மாநிலத்தின் பகல்பூர் மற்றும் மேற்கு வங்காளத்தின் ராம்பூர்ஹாட் போன்ற இடங்களை இணைக்கும் வகையில் இந்த திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    There is no air port available in தும்கா
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun