Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » துர்காபூர் » வானிலை

துர்காபூர் வானிலை

துர்காபூர் நகரத்தை குளிர்காலத்தில் நன்றாக சுற்றிப் பார்க்க முடியும். அக்டோபர் மாதத்தில் இலையுதிர் காலமும் மற்றும் பிப்ரவரி மாதத்தில் வசந்த காலமும் இந்த பகுதியில் சில நாட்களுக்கு மட்டும் நிலவுகிறது. இந்த பருவங்களில் வெப்பநிலை 25°C ஆக உள்ளது.

கோடைகாலம்

38 டிகிரிகள் வரையிலும் வெப்பநிலை இருக்கும் கோடைக்காலம் கடுமையான வெப்பத்துடன் இருப்பதால், சுற்றுலாவிற்கு ஏற்ற பருவமல்ல. இங்கே கோடைக்காலம் மார்ச் மாதம் தொடங்கி ஜுன் மாதம் வரை நீடிக்கும்.

மழைக்காலம்

மிதமான நிலையிலிருந்து, மிகவும் கனமான மழைப்பொழிவு வரை பெறும் மழைக்காலத்தில் துர்காபூருக்கு சுற்றுலா வந்தால் அதன் இயற்கையழகை நன்றாக இரசிக்க முடியும். இந்நாட்களில் வெப்பநிலை குறைந்திருப்பதால், சுற்றிப் பார்ப்பது எளிதாக உள்ளது.

குளிர்காலம்

மகிழச்சிகரமானதாகவும், வறட்சியாகவும் உள்ள குளிர்காலத்தில் துர்காபூரின் வெப்பநிலை 10 டிகிரிகள் மட்டுமே இருப்பதால், இந்நாட்களில் சுற்றுலா வருவது சிறந்தது. துர்காபூரின் குளிர்காலம் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலும் நீடித்திருக்கும்.