Search
  • Follow NativePlanet
Share

துர்காபூர் - மேற்கு வங்காளத்தின் இரும்பு நகரம்!

24

மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சரான டாக்டர். பிதன் சந்திரா ராய், தனது அண்டை மாநிலங்களில் உள்ளவை போன்றே ஒரு மாபெரும் இரும்பு எஃகு தொழில் நகரத்தை உருவாக்க நினைத்த கனவை நனவாக்குவதற்காகவே வளர்ந்த நகரம் தான் துர்காபூர்.

காலப்போக்கில், ஒரு சிறந்த எஃகு உற்பத்தி நகரம் என்ற பெயரிலிருந்து, பெரிய நகரியமாகவும் (Township), சிறந்த சுற்றுலாத் தலமாகவும் துர்காபூர்  வளர்ச்சியடைந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள துர்காபூருக்கு சுற்றுலா வருவது, வியாபாரம் மற்றும் ஓய்வு இரண்டடையும் சுற்றுலாப் பயணிகளுக்கு உறுதியளித்து, ஒவ்வொரு நொடியும் சிறந்த அனுபவத்தைத் தருவதாக உள்ளது.

துர்காபூரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

துர்காபூர் ஒரு தொழில் நகரமாக இருந்தாலும், இங்கே சுற்றுலாப் பயணிகள் காண வேண்டிய பல்வேறு அழகிய பூங்காக்களும் மற்றும் தோட்டங்களும் உள்ளன. மோகன் குமாரமங்கலம் பூங்கா, பர்ன்பூரில் உள்ள நேரு பூங்கா ஆகியவை அவற்றில் சில. பிஷ்னுபூர், ஜெய்தேவ் கென்டுலி, ராஹ்ரேஸ்வர் ஷிப் மந்திர் ஆகியவை இங்குள்ள முக்கியத்துவம் வாய்ந்த புனிதத் தலங்களாகும்.

தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வரும் பல்லடுக்கு வணிக வளாக கலாச்சாரத்தின் தாக்கம் துர்காபூரையும் விட்டு வைக்கவில்லை. துர்காபூரின் முதல் பல்லடுக்கு வளாகமான ட்ரீம்ப்ளக்ஸைத் தொடர்ந்து பல்வேறு ஷாப்பிங் மால்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான இந்த மால்களில் புகழ்பெற்ற பிராண்டுகளும், பல திரையரங்குகளும் அல்லது இவையிரண்டும் சேர்ந்தும் உள்ளன. இங்கே சமீபத்திய வரவாக உள்ள ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

பல ஆண்டுகளாகவே உள்ளூர்வாசிகளின் விருப்பத்திற்குரிய ஓய்விடமாக இருந்து வந்த, மோகன் குமாரமங்கலம் பூங்காவை துர்காபூர் சுற்றுலாத் துiயினர் மேம்படுத்தி அதனை குழந்தைகள் விளையாட்டுக்கள் மற்றும் படகு சவாரி மற்றும் இதர நீர்விளையாட்டுக்கள் கொண்ட ஒரு சிறு பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றி விட்டனர்.

மோகன் குமாரமங்கலம் பூங்காவை ஒட்டியுள்ள நீர்நிலைகளில் இந்த பகுதிகளிலேயே மிகவும் விஷத்தன்மை வாய்ந்த பாம்புகள் காணப்படுகின்றன. துர்காபூர் வரும் சுற்றுலாப் பயணிகள் அருகிலுள்ள பர்கேஸ்வருக்கும் சென்று அங்கிருக்கும் வெந்நீர் ஊற்றுகள் மற்றும் மிகவும் புகழ் பெற்ற கோவில்களைக் காணலாம்.

தொழில்துறையும், கல்வியும்

எஃகு நகரமாக இருப்பதன் காரணமாக, இங்கு உருவாக்கப் பட்டிருக்கும் தேசிய பொறியியல் கல்லூரி எண்ணற்ற மாணவர்கள் சில காலங்களுக்கு தங்கியிருந்து படித்து செல்ல வேண்டிய நகரமாக துர்காபூரை மாற்றியுள்ளது.

மாலை வேளைகளில் தெருக்களில் செல்லும் மாணவர்களை எங்கெங்கும் காண முடியும். மேலும், இங்கிருக்கும் உணவு விடுதிகள் அவர்களுடைய தேவை மற்றும் சுவைக்கேற்ற உணவுகளை தரவும் தவறுவதில்லை.

விளையாட்டின் மீதான ஆர்வம்

மேற்கு வங்கத்தின் பிற நகரங்களைப் போலவே துர்காபூரும் விளையாட்டை அனுபவித்து இரசிக்கும் நகரமாகும். விளையாட்டை விரும்பும், விளையாட்டு வீரர்களுக்கு நேரு விளையாட்டரங்கம், ASP விளையாட்டரங்கம் மற்றும் ஷாஹித் பகத் சிங் விளையாட்டரங்கம் ஆகியவை எப்பொழுதும் திறந்திருக்கும். மேலும், இங்கே விளையாட்டை விரும்பும் மாணவர்களால் இவை எப்பொழுதும் நிறைந்திருக்கும்.

இயற்கையுடன் இணைந்திருக்க மிகவும் ஏற்ற இடமாக துர்காபூர் உள்ளது. இங்குள்ள நகர மக்களிடம் ஒரு சிறு நகர வாழ்க்கை அனுபவங்களையே காண முடியும். அதே சமயத்தில், சுற்றுலாப் பயணிகள் இங்கே இந்திய எஃகு தொழிலின் பெரிய வடிவத்தையும் காண முடியும்.

எளிதாக பிற நகரங்களிலிருந்து வந்து செல்லும் வகையில் உள்ள துர்காபூருக்கான பயணம், வேகமானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருப்பதுடன், ஆரவாரமான நகர வாழ்க்கையிலிருந்து விலகியிருப்பதற்கும் உறுதியளிக்கிறது.

துர்காபூருக்கு எப்படி வரலாம்?

துர்காபூர் நகரம் சாலைகள் மற்றும் இரயில் வசதிகளால் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

துர்காபூரின் பருவநிலை

துர்காபூருக்கு சுற்றுலா வர மிகவும் ஏற்ற பருவம் குளிர்காலம்!

துர்காபூர் சிறப்பு

துர்காபூர் வானிலை

சிறந்த காலநிலை துர்காபூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது துர்காபூர்

  • சாலை வழியாக
    தேசிய நெடுஞ்சாலை எண் 2 மற்றும் AH-1 வழியாக துர்காபூர் கொல்கத்தாவுடன் நேரடியாக இணைக்கபட்டு, 3 மணி நேரத்தில் அடையும் வகையில் உள்ளது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மேற்கு வங்கத்திலிருக்கும் பிற இரயில் நிலையங்களுடனும் மற்றும் கொல்கத்தாவுடனும் துர்காபூர் இரயில் நிலையம் இணைக்கப்பட்டிருப்பதால், இந்நகரம் நாடு முழுவதும் நல்ல இரயில் சேவையைப் பெற்றுள்ளது எனலாம். மேலும், துர்காபுர் வழியாக பல்வேறு விரைவு இரயில்கள் கடந்து செல்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    3 மணி நேர பயணத் தொலைவில் இருக்கும் கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்திலிருந்து துர்காபூருக்கு எளிதில் வரலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Apr,Thu
Check Out
19 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri