Search
  • Follow NativePlanet
Share

எர்ணாகுளம் – கேரளாவின் முக்கிய வணிகக்கேந்திரம்

14

அரபிக்கடலை ஒட்டி வீற்றிருக்கும் கொச்சி மாநகரத்தின் இரட்டை நகரமே இந்த எர்ணாகுளம். இங்கு வீற்றிருக்கும் எர்ணாகுளத்தப்பன் கோயிலின் பெயரால் இந்த நகரம் அழைக்கப்படுகிறது. சிவபெருமான் இந்த கோயிலில்  ‘எர்ணாகுளத்தப்பன்’ எனும் தெய்வமாக காட்சியளிக்கின்றார். எர்ணாகுளம் என்பதற்கு ‘என்றும் நீடித்திருக்கும் குளம்’ என்று பொருள். கேரள மாநிலத்தின் நெடிய வரலாற்றில் வியாபாரமும் வணிகமும் தழைத்தோங்கிய முக்கிய நகரமாக இந்த எர்ணாகுளம் அறியப்பட்டு வந்திருக்கிறது.  

திருவிழாக்களும் விருந்துணவும்

வியாபார கேந்திரமாக மட்டுமல்லாது செழுமையான ஒரு கலாச்சார பாரம்பரியத்தையும் இந்த நகரம் வாய்க்கப்பெற்றிருக்கிறது. உள்ளூர் திருவிழாக்களின்போது இந்த அம்சங்கள் வண்ணமயமான சடங்குகள் மூலம் பிரதிபலிக்கப்படுகின்றன.

மயங்க வைக்கும் வித்தியாசமான திருவிழாக்கொண்டாட்டங்களை காண்பதற்காகவே இங்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். எடப்பள்ளி விருந்து திருவிழா மற்றும் யூதத்திருவிழா போன்ற பிரசித்தமான விருந்து திருவிழாக்கள் இந்த பழமையான நகரத்தில் கொண்டாடப்படுகின்றன.

வெகுகாலமாகவே எர்ணாகுளம் நகரம் சுற்றுலா பிரியர்களின் சொர்க்கமாக இருந்து வரும் பெருமையை பெற்றுள்ளது. பொல்கட்டி அரண்மனை, கொச்சி கடற்கரை, இளவரசி தெரு மற்றும் சோட்டாணிக்கரா கோயில் போன்ற பிரபல்யமான சுற்றுலா அம்சங்கள் இங்கு பார்க்க வேண்டிய இடங்களாகும். இந்தியாவிலேயே புகை மாசு இல்லாத ஒரே சுற்றுலா நகரம் எனும் பெருமையையும் எர்ணாகுளம் கொண்டிருக்கிறது.

வேடிக்கை பார்த்தபடி சுற்றி வருவதற்கு இந்த நகரம் மிகவும் ஏற்றது. சந்தடி நிறைந்த தெருக்கள் என்றாலும் கேரள பாரம்பரியம் மற்றும் அயல் நாட்டு பாரம்பரியம் யாவும் கலந்த இந்த வீதிகளில் சுற்றிவருவது அலுக்கவே அலுக்காத அனுபவமாக இருக்கும்.

பழமையான நகரம் என்றாலும் நவீனத்தின் அடையாளங்களுக்கும் இங்கு குறைவே இல்லை. மால்’கள் , பூங்காக்கள், சர்வதேச பிராண்டுகளின் ஷோரூம்கள் என்று இங்கு எல்லா வசதிகளும் நிறைந்துள்ளன.

வித்தியாசமான நகரங்களை தேடி விஜயம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக ஒரு முறை எர்ணாகுளத்துக்கு வரலாம். குடும்பத்துடன் சுற்றுலா மேற்கொள்ளவும் இது மிகவும் ஏற்றது.

போக்குவரத்து வசதிகள்

கேராளாவின் முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநில நகரங்கள் ஆகியவற்றோடு நல்ல போக்குவரத்து வசதிகளால் எர்ணாகுளம் இணைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நெடும்பசேரி சர்வதேச விமான நிலையம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ரயில் மற்றும் பேருந்து சேவைகளுக்கும் குறைவில்லை.

எர்ணாகுளம் சிறப்பு

எர்ணாகுளம் வானிலை

சிறந்த காலநிலை எர்ணாகுளம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது எர்ணாகுளம்

  • சாலை வழியாக
    சாலை மார்க்கமாகவும் எர்ணாகுளம் நாட்டின் முக்கிய நகரங்களுடன் நல்ல முறையில் இணைக்கப்பட்டிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் சாலை மார்க்கமாக எர்ணாகுளம் வந்துவிடலாம். வடக்கு தெற்கு மார்க்கத்தில் இது ஒரு முக்கிய நகரமாக அமைந்திருக்கிறது. மாநில அரசுப்பேருந்துகள் இங்கிருந்து கேரளாவின் இதர முக்கிய நகரங்கள் மட்டுமல்லாமல் அண்டை மாநில முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன. தனியார் சொகுசுப்பேருந்துகளும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    எர்ணாகுளம் நகரில் இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. ஒன்று எர்ணாகுளம் ஜங்க்ஷன்; மற்றொன்று எர்ணாகுளம் டவுன். எர்ணாகுளம் ஜங்க்ஷன் ரயில் நிலையம் வட திசை நகரங்களுக்கும், எர்ணாகுளம் டவுன் ரயில் நிலையம் தெற்குப்பகுதி நகரங்களுக்கும் ரயில் சேவைகளை அளிக்கின்றன. இந்த இரண்டு நிலையங்களுமே இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களையுமே இணைத்து விடுகின்றன. நகரத்திற்குள் வர டாக்சி மற்றும் ஆட்டோ வசதிகள் பயணிகளுக்கு கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கொச்சி நெடும்பசேரி சர்வதேச விமான நிலையம் எர்ணாகுளத்திலிருந்து 38 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு உள்நாட்டு மற்றும் விமான சேவைகள் குறைவின்றி கிடைக்கின்றன. மேலும் இங்கிருந்து எர்ணாகுளம் வருவதற்கு டாக்சி மற்றும் பேருந்து சேவைகளும் ஏராளம் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu