Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஈரோடு » வானிலை

ஈரோடு வானிலை

பொதுவாகவே ஈரோட்டின் பருவநிலை வருடம் முழுவதும் வறட்சியானதாக இருக்கும். எனினும், ஈரோட்டிற்கு வந்து செல்ல ஏற்ற காலங்களாக அக்டோபர் முதல் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்கள் அறியப்படுகின்றன.

கோடைகாலம்

ஈரோட்டில் கோடைக்காலம் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நீடித்திருக்கிறது. இந்த கால கட்டத்தில் வெப்பநிலையானது 23 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

மழைக்காலம்

ஜுன் மாதம் தொடங்கும் மழைக்காலம் செப்டம்பர் மாதத்தின் இறுதியில் முடிவடையும். ஒரு வருடத்தில் ஈரோட்டில் பெய்யும் மொத்த மழைப்பொழிவு 100மிமீ அளவிற்கு இருக்கும். வட கிழக்கு பருவமழை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைப்பொழிவை தரும். ஜுன் முதல் ஆகஸ்டு மாதங்கள் வரையிலும் நீடிக்கும் தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் ஈரோடு அதிகமான மழைப் பொழிவை பெறும்.

குளிர்காலம்

ஈரோடு நகரின் குளிர் காலங்களான டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலங்களில்  வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸ் முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.