Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காந்திநகர் » வானிலை

காந்திநகர் வானிலை

பருவமழை காலத்தை தவிர, காந்திநகர் ஆண்டு முழுவதும் மழை இல்லா வறண்ட வானிலையை பெற்றிருக்கிறது.

கோடைகாலம்

இங்கு பிப்ரவரியில் தொடங்கும் கோடைகாலம் மே மாதம் வரை நீடிக்கிறது. மே மாதத்தில் காந்திநகரில் தாங்க முடியாத அளவிற்கு வெப்பம் நிலவுவதால் மே மாதமே காந்தி நகரின் உட்ச பட்ச கோடை காலம் ஆகும். கோடை காலத்தில் வெப்பநிலை பொதுவாக 42 டிகிரி செல்ஸியஸ் மற்றும் 23 டிகிரி செல்ஸியஸிற்கு இடையே காணப்படும்.

மழைக்காலம்

காந்திநகரில் ஜூன் மாதம் தொடங்கும் பருவமழை செப்டம்பர் வரை நீடிக்கிறது. காந்திநகர் பருவமழை காலத்தில் கன மழையைப் பெறுகிறது.

குளிர்காலம்

இங்கு அக்டோபரில் தொடங்கும் குளிர்காலம் ஜனவரி வரை நீடிக்கிறது. இந்தப் பருவத்தில் மிதமான வெப்பநிலையே நிலவுவதால், இந்தப் பருவம் சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்ற பருவம் ஆகும். குளிர்காலத்தில் காந்திநகரின் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை முறையே 36 டிகிரி செல்ஸியஸ் மற்றும் 12 டிகிரி செல்ஸியஸாக பதிவாகிறது.