Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காங்க்டாக் » வானிலை

காங்க்டாக் வானிலை

உயரமான மலைப்பகுதியில் வசிப்பிடங்கள் நிறைந்த சுற்றுப்புறச்சூழலை கொண்டிருக்கும் காங்க்டோக் மலைவாசஸ்தலம் வருடமுழுதும்  இனிமையான குளுமையான சூழலை கொண்டுள்ளது.

கோடைகாலம்

( ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை) : காங்க்டாக்  பகுதியில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடைக்காலம் நிலவுகிறது. கோடைக்காலத்தின்போது இதமான சூழல் நிலவுவதோடு அதிகபட்சமாக 22°C வெப்பநிலை மட்டுமே காணப்படும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் அக்டோபர் வரை) : காங்க்டாக் பகுதி உபவெப்பமண்டல பருவநிலையால் உருவாகும் மழைக்காலத்தை பெற்றுள்ளது.  ஜூன் மாதம் துவங்கி அக்டோபர் மாதம் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் கடுமையான மழைப்பொழிவை இப்பகுதி பெறுகிறது. இதனால் அவ்வப்போது நிலச்சரிவுகளும் இங்கு ஏற்படுவதால் மழைக்காலத்தில் சாலைப்போக்குவரத்து பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. ஜுலை மாதத்தில் குறிப்பாக அதிக மழைப்பொழிவு காணப்படும்.

குளிர்காலம்

காங்க்டாக் பகுதி குளிர்காலத்தின்போது மிகக்கடுமையான குளிருடன் காட்சியளிக்கிறது. இக்காலத்தில் சராசரி வெப்பநிலை -3°C  வரை இறங்கி காணப்படும். இருப்பினும் பனிப்பொழிவு இப்பகுதியில் குறைவாகவே நிலவுகிறது. 1990, 2004, 2005 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் காங்க்டாக் பகுதி மிக அதிகமான பனிப்பொழிவை பெற்றுள்ளது.