Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கஞ்சம் » வானிலை

கஞ்சம் வானிலை

நாள் முழுவதும் குளுமையான காற்று வீசிக் கொண்டிருக்கும் வேளையில், கஞ்சம் நகரத்தின் குளிர்காலம் மனதை மயங்க வைக்கும் அனுபவங்களை தருவதாக உள்ளது. இன்ப சுற்றுலா மற்றும் ஊர்சுற்றி பார்த்தல் போன்ற சுற்றுலா செயல்பாடுகளால் இந்நகரத்தின் சுற்றுலா அமைவிடங்கள் அனைத்துமே மக்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. பரந்திருக்கும் காடுகளுக்கு நடுவே விறகுகளை கூட்டி நெருப்பு மூட்டி பொழுதைக் கழிப்பதிலும் மற்றும் கஞ்சமின் அற்புதமான கடற்கரைகளில் சூரியக்குளியல் செய்வதிலும் சுற்றுலாப் பயணிகள் தங்களை மறந்து இருப்பார்கள்.

கோடைகாலம்

கஞ்சம் நகரத்தில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலும் கோடைக்காலம் நிலவுகிறது. இந்நாட்களில் அதிக வெப்பநிலை நிலவி வரும். மே மாதம் மிகவும் வெப்பமான மாதமாக உள்ளது. கடற்கரையோர நகரமாக இருப்பதால், கஞ்சம் நகரத்தின் கோடைக்காலம் கடும் வெப்பமாக இருக்கும். சுட்டெறிக்கும் சூரியக்கதிர்கள் உங்களை சுடாமலிருக்க வேண்டுமென நினைத்தால், கோடைக்கலாத்தில் இங்கு சுற்றுலா வருவதை தவிர்க்கவும்.

மழைக்காலம்

ஜுன் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் தொடங்கும் தென் மேற்கு பருவமழைக்காலம் செம்டம்பர் மாதத்தின் இறுதி வரையிலும் நீடித்திருக்கும். மழைக்காலத்தின் வருகையால் மகிழ்ச்சிகரமான சூழலுடன், 70 சதவிகிதம் இந்நகரம் மழைப்பொழிவையும் பெற்றிருக்கும். சுட்டெறிக்கும் வெப்பத்தை குறைப்பதாக இருந்தாலும், அடிக்கடி மழை பெய்வதால் இந்த பருவமும் சுற்றுலாவிற்கு ஏற்ற பருவமாக இது கருதப்படுவதில்லை.

குளிர்காலம்

அக்டோபர் மாதத்தின் இறுதியில் மழைக்காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும். டிசம்பர் மாதத்தில் கஞ்சம் நகரின் வெப்பநிலை 10 வரையிலும் சென்று விடும். பிப்ரவரி மாதம் வரையிலும் நீடிக்கும் குளிர்காலத்தில் வெப்பநிலை அழகுற மற்றும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். இந்நாட்களில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவு வருவது வழக்கம்.