Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கயா » வானிலை

கயா வானிலை

கயா சுற்றுலாவை திட்டமிடுவதற்கு செப்டம்பர் மாதமே மிகவும் சிறந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் தொடங்கு கயா யாத்திரை ஜனவரி மாதத்தில் உச்சத்தை அடைகின்றது.  கயா சுற்றுலாவிற்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களே மிகவும் சிறந்தது. எனினும் கயாவில்  மே மாதத்தில் கொண்டாடப்படும் புத்த ஜெயந்தி கொண்டாட்டங்கள் பெரிய அளவில் பக்தர்களை கவர்கின்றது.

கோடைகாலம்

கயா, வெப்ப மண்டல பகுதியில் அமைந்துள்ள காரணத்தால் மிகவும் வெப்பமான கோடைகாலத்தை அனுபவிக்கிறது. கோடை காலத்தில் இங்கு அதிக பட்ச வெப்ப நிலை சுமார்  45 டிகிரி செல்ஸியஸ் வரை  செல்கின்றது. ஆகவே இங்கு கோடைகாலத்தில் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களுடன் பருத்தி ஆடைகளை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழைக்காலம்

இங்கு ஜூலை மாதத்தில் தொடங்கும் பருவமழையனது செப்டம்பர் இறுதி வரை தொடர்கின்றது. இந்த முழு பகுதியும் பருவமழைக் காலத்தில் அதிக மழைப்பொழிவை அனுபவிக்கிறது. ஆகவே சுற்றுலா பயணிகள் கயாவிற்கு பருவ மழைக்காலத்தில் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குளிர்காலம்

இங்கு மார்ச் மாதத்தில் தொடங்கும் குளிர்காலம் அக்டோபர் மாதம் வரை தொடர்கின்றது. இங்கு இந்தப் பருவத்தில் இனிமையான வானிலை நிழவுவதால் கயா சுற்றுலாவிற்கு இதுவே மிகவும் உகந்த பருவம் ஆகும். இங்கு நவம்பர் முதல் பிப்ரவரி வரை மிகக் குளிரான  வெப்பநிலை நிலவுவதால் இந்தப் பருவமே இந்த பகுதியியை ஆராய்ந்து அனுபவிக்க  மிகவும் உகந்த பருவம். குளிர்காலத்தில் இங்கு சுற்றுலா வரும் பயணிகள் தங்களுடன் கனமான கம்பளி ஆடைகளை உடன் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.