Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கிரிதிஹ் » வானிலை

கிரிதிஹ் வானிலை

வறட்சியான பருவநிலையை கொண்டுள்ள கிரிதிஹ் சுற்றுலாத்தலம் அதிக வெப்பத்தைக்கொண்ட கோடைக்காலத்தையும், அதிகக்குளிர் நிலவும் குளிர்காலத்தையும் கொண்டிருக்கிறது. மழைக்காலத்தில் இங்கு நிலவும் சௌகரியமான சூழல் ரசிக்கக்கூடிய ஒன்றாக காணப்படுகிறது.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை) : ஏப்ரல் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் ஜுன் மாதம் வரை நீடிக்கிறது. மே மாதத்தில் வெப்பம் கடுமையாக இருப்பதோடு  அதிகபட்சம் 47°C வரையிலும் வெப்பநிலை உயந்து காணப்படுகிறது. முன்மழைக்கால மாதமான ஜுன் வரை நீடிக்கும் இந்த கோடைக்காலத்தில் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும்.   

மழைக்காலம்

(ஜுன் முதல் அக்டோபர் வரை) : ஜுன் முதல் அக்டோபர் பாதி வரை இப்பகுதியில் மழைக்காலம் நிலவுகிறது. குறிப்பாக ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் இங்கு  அதிக மழைப்பொழிவு காணப்படும்.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை) : கிரிதிஹ் நகரத்தில் அக்டோபர் மாதம் துவங்கி பிப்ரவரி வரை குளிர்காலம் நீடிக்கிறது. 20°C  வெப்பநிலையில் துவங்கி 5°C  வரை இக்காலத்தில் வெப்பநிலை குறையக்கூடும். எனவே குளிர்காலத்தில் உல்லன் உடைகள் இல்லாமல் இந்தப்பகுதியில் பயணம் செய்வது சிறந்ததல்ல. இருப்பினும் குளுமையான இந்த பருவத்தில் இந்தப்பகுதியின் சுற்றுலா மற்றும் சிற்றுலா செயல்பாடுகள் தீவிரமடைகின்றன.