Search
  • Follow NativePlanet
Share

கோபால்பூர் - வியப்பூட்டும் அழகின் இருப்பிடம்!

14

கடற்கரை நகரமான கோபால்பூர் ஒடிசாவின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. வங்கக் கடலுக்கு அருகில் உள்ள கோபால்பூர் ஒடிசாவின் முக்கியமான மூன்று சுற்றுலா தளங்களுள் ஒன்றாகும். பெர்ஹாம்பூரில் இருந்து 15கிமீ தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு வருடம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள்.

சிறிய மீனவ கிராமமாக இருந்த இந்த நகருக்கு ஆங்கிலேயர்களின் வருகையின் போது விமோசனம் கிடைத்தது. கிழக்கிந்திய கம்பனி இந்த நகரை தங்கள் கப்பல் தளமாக பயன்படுத்தினார்கள். ஆந்திர பிரதேசத்திற்கு அருகில் உள்ளதாலும் மற்ற தென்னிந்திய மாநிலங்களுக்கு அருகில் உள்ளதாலும் இந்நகரம் வியாபார மையமாக வளர்ந்தது.

கோபால்பூர் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்

மா தாரா தரிணி மலைக்கோவில், பால குமாரி கோவில், சித்திபினாயகா பிதா போன்ற கோவில்களும், சோனேபூர் கடற்கரை, ஆர்யபள்ளி கடற்கரை, போபால்பூர் கடற்கரை போன்ற கடற்கரைகளும் இங்கு உள்ளது.

பாரம்பரிய வாழ்க்கைமுறையால் காண்போரை ஈர்க்கும் பஞ்சமா, பள்ளிபதார் போன்ற அருகாமை கிராமங்களும் உள்ளன. சடபடா டால்பின் சரணாலயம் மற்றும் பங்கேஷ்வரி ஆகிய இடங்களும் முக்கியமானவை.

கோபால்பூர் சந்தை

வாங்குவதில் விருப்பமுள்ளவர்களுக்கு புகழிடமாக கோபால்பூர் திகழ்கிறது. கைவினைப் பொருட்கள், கடல் ஓடுகள், பட்டு சேலைகள் ஆகியவை உள்ளூர் மக்களால் விற்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாது ஓடுகளால் ஆன கைவளையங்கள், அணிகலன்களும் கிடைக்கின்றன.

கோபால்பூர் செல்ல வழிகள்

பிஜு பட்நாயக் விமானநிலையத்தை கோபால்பூர் செல்ல நினைக்கும் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாது பெஹ்ராம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கோபால்பூருக்குரயில் சேவைகள் உண்டு. தனியார் கார்கள் மற்றும் பேருந்துகள் மூலமும் பயணிக்கலாம்.

பயணிக்க சிறந்த பருவம்

வருடம் முழுதும் மிதமான வானிலை நிலவும் கோபால்பூருக்கு செல்ல உகந்த பருவமாக அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் கருதப்படுகிறது.

கோபால்பூர் சிறப்பு

கோபால்பூர் வானிலை

சிறந்த காலநிலை கோபால்பூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கோபால்பூர்

  • சாலை வழியாக
    சாலை வசதிகள் சிறப்பாக உள்ள கடற்கரை நகரமான கோபால்பூரில் இருந்து பல மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு பேருந்து மற்றும் தனியார் கார் வசதி உண்டு.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    அருகாமையில் உள்ள பெஹ்ராம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கோபால்பூர் 16கிமீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து தனியார் கார்கள் மூலம் இலக்கை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கோபால்பூரில் இருந்து 165 கிமீ தொலைவில் உள்ள பிஜூ பட்நாயக் விமான நிலையமே அருகாமையில் உள்ள விமான நிலையமாகும். இங்கிருந்து இந்தியாவின் பல முக்கியமான நகரங்களுக்கு விமான சேவை உண்டு.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat