Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோரக்பூர் » வானிலை

கோரக்பூர் வானிலை

வட இந்தியாவின் பிற நகரங்களைப் போல் கோரக்பூரை சுற்றிப் பார்க்க நவம்பர் முதல் மார்ச் வரையிலான ஐந்து மாதங்களே மிகச் சிறந்தது. எனெனில் இந்த ஐந்து மாதங்களுக்கு வானிலை லேசாகவும் இனிமையாவும் இருக்கும். பிற மாதங்களில் கோரக்பூரில் மிகச் சூடான மற்றும் உலந்த வானிலையே நிலவும்.  

கோடைகாலம்

கோரக்பூரின்  கோடைகாலம்  மார்ச் மாதத்தில் தொடங்கி மே மாதம்  வரை நீடிக்கிறது. சில சமயம் இது ஜூன் வரை நீடிக்கலாம். மே மாதமே கோரக்பூரின் மிக வெப்பமான மாதமாக அறியப்படுகிறது. கோடை காலத்தில் கோரக்பூரின் அதிக பட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை முறையே  25 ° C மற்றும் 40 ° C ஆகும்.

மழைக்காலம்

இங்கு பருவமழை ஜூலை மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கிறது. இந்நகரம் ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்ச மழையை பெறுகிறது. இந்த காலத்தில் வானிலை ஈரப்பதமான மற்றும் மேகங்கள் சூழ்ந்து காணப்படும். மேலும் இக்காலத்தில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.

குளிர்காலம்

குளிர்காலத்தில் கோரக்பூரின் வானிலை லேசாகவும், இனிமையாகவும் இருக்கும். இங்கு குளிர்காலம் நவம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கிறது. குளிர்காலத்தில் கோரக்பூரின் அதிக பட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை முறையே  9 ° C  மற்றும் 25° C ஆகும்.