ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பரமுல்லா மாவட்டத்தில், குல்மார்க்கிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்திலும், கடல் மட்டத்திலிருந்து 1553 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது பட்டன் என்னும் நகரம்.
வரலாற்றின்படி இவ்விடமானது முந்தைய காலத்தில் இம்மாநிலத்தின் தலைநகரமாக இருந்துள்ளது. கிபி 9 ஆம் நூற்றாண்டில் இந்நகரம் அப்போதைய இந்து மன்னரான அவந்திவர்மனால் உருவாக்கப்பட்டு, அவரது தந்தையான மன்னர் சங்கரவர்மன் என்பவரின் நினைவாக, சங்கர்பூர் என்று பெயரிடப்பட்ட்து என வரலாறு கூறுகிறது. முந்தைய காலத்தில் இந்நகரம் மிகப்பெரிய பழச் சந்தையாக இருந்தது என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications