Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குல்மார்க் » வானிலை

குல்மார்க் வானிலை

மார்ச் முதல் அக்டோபர் வரையான காலத்தில் குல்மார்க்கிற்கு செல்வதே மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. காட்சி எழிலைக் கண்டு இன்புறுதல் மட்டுமின்றி, பனிப்பொழிவு முடிந்ததும் நடைபெறும் ஏராளமான குளிர்கால விளையாட்டுக்களை விளையாடி மகிழவும் இக்காலமே மிகவும் ஏற்றது.

கோடைகாலம்

மார்ச் முதல் மே வரை நீடிக்கும் காலம் கோடைக்காலம் ஆகும். குல்மார்க்கில் கோடைக்காலம் மிகவும் இனிமையானது. கோடைக்காலத்தில் வெப்பநிலையானது, 13°C யிலிருந்து 29°C வரை இருக்கும். இதனால் இத்தருணத்தில் சுற்றுலா இனிமையானதாக இருக்கும்.

மழைக்காலம்

ஜூலை முதல் அக்டோபர் வரை நீடிக்கும் காலம் மழைக்காலம் ஆகும். மழைக்காலத்தில் குல்மார்க்கில் மிதமான மழைப்பொழிவு இருக்கும். இக்காலத்தில் குல்மார்க்கிற்கு சுற்றுலா செல்ல திட்டமிடும் பயணிகள் மழைக்கோட்டுடன் செல்லலாம்.

குளிர்காலம்

நவம்பர் முதல் பிப்ரவரி வரையான காலமே குல்மார்க்கில் குளிர்காலமாகும். இக்காலத்தில் இங்கு வெப்பநிலை 2°C முதல் 9°C வரை நிலவும். இக்காலத்தில் மிக அதிக அளவு பனிப்பொழிவு இருக்கும். இப்பகுதியில், 12 மீட்டர் அளவு வரை பனிப்பொழிவு இருந்ததாகப் பதிவாகியுள்ளது. சாகசப்பிரியர்கள் தமது சாகச அனுபவங்களை பெறுவதற்கு இதுதான் மிகவும் உகந்த காலமாகும்.  நீண்ட தூர பனிச்சறுக்கு போன்ற அனுபவங்களை சுற்றுலாப்பயணிகள் இக்காலத்தில் பெறலாம்.