Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குணா » வானிலை

குணா வானிலை

பிப்ரவரி- மார்ச் மாதங்களில் குணா நகரில் அருமையான வானிலை நிலவும். வெப்பம் குறைந்து, லேசான குளிரோடு இருக்கும் இந்த சமயத்தில் குணா நகரை மன நிறைவுடன், உற்சாகமாக ரசிக்க முடியும்.

கோடைகாலம்

குணா நகரின் கோடை காலங்களான மார்ச் தொடங்கி மே வரை வெப்பம் மிக அதிகமாக இருக்கும். அதிகபட்சமாக 45 டிகிரியும், குறைந்த பட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும்.

மழைக்காலம்

மழைக்காலத்தில் வெப்பம் ஓரளவுக்கு குறைந்து காணப்படும். சுமாரான மழைப் பொழிவு கொண்ட இடமாக குணா திகழ்கிறது. இந்நகரத்தில், மழைக்காலம் முழுவதுமே மிதமான வெப்பம் நிலவுகிறது.

குளிர்காலம்

அக்டோபர் முதல் ஜனவரி வரை குணா நகரில் குளிர்காலம். குறைந்த பட்சமாக 10 டிகிரியும், அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகும். குளிர்காலம் முழுவதும், குறைந்த வெப்பத்துடன் இதமான சூழ்நிலை நிலவும்.