Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குர்கான் » வானிலை

குர்கான் வானிலை

குர்கான் ஆண்டு முழுவதும் மிகத் தீவிரமான  காலநிலையை அனுபவிக்கிறது. இங்கு மிகவும் வெப்பமான கோடை மற்றும் மிகவும் குளிர்ந்த குளிர்காலங்கள் நிலவுகின்றன.  குர்கானைப்  பார்பதற்கு அக்டோபர் முதல் மார்ச் வரை உள்ள மாதங்களே மிகவும் சிறந்தவை.

கோடைகாலம்

இங்கு ஏப்ரல் மாதத்தில்  தொடக்கும் கோடைகாலம் ஜூலை மாதம் மத்தி வரை தொடர்கிறது. இங்கு மே மற்றும் ஜூன் மாதங்களில் அதிகபட்ச வெப்ப நிலை நிலவுகிறது. இந்த மாதங்களில் உட்ச பட்ச  வெப்பநிலை 49 டிகிரி செல்ஸியஸ் வரை செல்லக் கூடும். எனவே சுற்றுலா பயணிகள் இந்தப் பருவத்தில் குர்கானுக்கு செல்லாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழைக்காலம்

இங்கு பருவமழை ஜூலை மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மத்தி வரை நீடிக்கிறது. குர்கான் சராசரியாக 714 மி.மீ மழையளவை பெறுகிறது. இங்கு  பருவமழை காலங்களில்  ஈரப்பதம் அதிகரிக்கின்றது. எனவே இந்தப் பருவத்தில் இங்கு சுற்றுலா செல்வது உகந்ததல்ல.

குளிர்காலம்

இங்கு நவம்பர் மாதத்தில் தொடங்கும் குளிர்காலம் ஜனவரி வரை நீடிக்கிறது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் இங்கு மிகக் கடுமையான மற்றும் தீவிரமான குளிர் நிலவுகிறது. இந்தப் பருவத்தில் குர்கானின்  வெப்பநிலை மிகக் குறைந்த அளவான 4 டிகிரி செல்ஸியஸ் வரை சென்று விடுகிறது. சில சமயங்களில் குளிர்காலத்தில் மார்ச் மாதம் வரை நீடிக்கலாம். இங்கு இந்தப் பருவத்தில் சுற்றுலா வரும் பயணிகள் தங்ளுடன் மெல்லிய கம்பளி ஆடைகளை தங்களுடன் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இந்தப் பருவத்தில்  இரவு வெப்பநிலை மிகவும் குறைந்து விடும்.