Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குவாலியர் » வானிலை

குவாலியர் வானிலை

குவாலியரில் மிக அதிகமான வெப்பநிலையுடன் கூடிய கோடைகாலமும், மிகக் குளிர்ச்சியான குளிர்காலமும் நிலவுகிறது. எனினும் குளிர்காலமே குவாலியருக்கு சென்று சுற்றிப்பார்க்க ஏற்ற பருவமாகும். இக்காலத்தில் குவாலியருக்குச் செல்லும்பொழுது கதகதப்பை அளிக்கும் கம்பளி ஆடைகளை உடன் எடுத்துச் செல்வது சிறந்தது.

கோடைகாலம்

குவாலியரில் கோடைக்காலமானது மார்ச் மாதம் துவங்கி ஜூன் மாதம் வரை நீடிக்கிறது. கோடையில் இந்நகரத்தில் மிகவும் வறண்ட கோடை நிலவுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 47°C வரை உயரும். குவாலியரைச் சுற்றிப்பார்க்க விரும்புபவர்கள் இக்காலத்தில் சுற்றுலாவுக்குத் திட்டமிட வேண்டாம்.

மழைக்காலம்

சுட்டெரிக்கும் கோடைக்காலத்திற்கு பிறகு ஜூலை மாதம் மழைக்காலம் தொடங்குகிறது. அக்டோபர் இறுதிவரை இங்கு மழைப் பொழிவு இருக்கும். இக்காலத்தில் வெப்பநிலையானது 25°C முதல் 32°C வரை பதிவாகும். இக்காலம் முழுதும் அடிக்கடி மழை பெய்யும். இங்கு சுற்றுலா செல்வதற்கு இதுவும் உகந்த காலம் அல்ல.

குளிர்காலம்

மிகக் குளிரான குளிர்காலம் குவாலியரில் நிலவுகிறது. நவம்பர் முதல் பிப்ரவரி வரையான காலமே இங்கு குளிர்காலமாகும். வெப்பநிலையானது 0-க்கும் கீழே செல்லும். சில சமயங்களில், இரவு நேரங்களில்,வெப்பநிலை மைனஸ் அளவுக்கும் இறங்கலாம். ஆனால் பொதுவாக, பகல் வேளைகளில் வெப்பநிலையானது 27°C யைச் சுற்றியே இருக்கும். இக்காலமே குவாலியருக்கு சென்று சுற்றிப்பார்க்க உகந்த பருவமாகும்.