Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹஃப்லொங் » வானிலை

ஹஃப்லொங் வானிலை

ஹஃப்லொங்கிற்கு சுற்றுலா செல்ல கோடை காலமே சிறந்தது. இங்கு கோடை காலத்தில் அதிக வெப்பம் காணப்படுவதில்லை. இந்த பருவத்தில் மழைப் பொழிவும் மிகவும் குறைவு. ஆகவே ஹஃப்லொங்கிற்கு சுற்றுலா செல்வதற்கு கோடை காலமே சிறந்தது. வட சச்சர் மலைகளின் குளிரை அனுபவிக்க விரும்பும் சுற்றுலா பயணிகள் இங்கு குளிர் காலத்தில் சுற்றுலா வருவது மிகவும் நல்லது.

கோடைகாலம்

ஏப்ரல், மே, மற்றும் ஜூன் மாதங்களே ஹஃப்லொங்கின் கோடைகாலமாகும். இங்கு கோடையின் அதிக பட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை முறையே 30 மற்றும் 24 டிகிரி செல்ஸியஸ் ஆகும். மேலும் கோடைகாலம் ஹஃப்லொங்கின் இனிமையான பருவம் ஆகும். சில சமயங்களில் இங்கு கோடை காலத்தில் மழை பெய்யக் கூடும்.

மழைக்காலம்

சரியான பருவ மழை இங்கு ஜூன் மாதத்தின் இறுதியில் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கிறது. இந்த பகுதிக்கு தென் மேற்கு பருவமழை கணிசமான மழையை கொண்டு வருகிறது. பருவமழை இங்கு அடைமழையுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை காலத்தில் ஹஃப்லொங் பசுமையாகக் காணப்பட்டாலும், இந்த பருவத்தில் இங்கு சுற்றுலா செல்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

குளிர்காலம்

இங்கு அக்டோபர் மாதத்தில் தொடங்கும் குளிர்காலம் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கிறது. இங்கு குளிர்காலத்தில் கடும் குளிர் நிழவுவதால் இங்கு இந்த பருவத்தில் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் தங்களுடன் இதமான கம்பளி ஆடைகளை எடுத்துக் கொண்டு வருவது மிகவும் நல்லது. குளிர்காலத்தில் ஹஃப்லொங்கின் அதிக பட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை முறையே 14 மற்றும் 10 டிகிரி செல்சியஸ் ஆகும். குளிர் காலமே ஹஃப்லொங்கிற்கு சுற்றுலா செல்வதற்கு மிகவும் ஏற்ற பருவம் ஆகும்.