Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹாஜோ » வானிலை

ஹாஜோ வானிலை

ஹாஜோ நகரின் அழகை முழுமையாக ரசிக்க ஏற்றது மழைக்காலம். நகரம் முழுவதும் பச்சை பசேல் என இயற்கை எழில் கொஞ்சும் அழகை மழைக்காலத்தில் கண்டு ரசிக்கலாம். இந்த சமயத்தில் இதமான வெப்பம் இருக்கும். அவ்வப்போது மழை பொழிந்தாலும், ஹாஜோவை சுற்றிப்பார்ப்பது சிரமமானதாக இருக்காது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் ஹாஜோ நகரம் புழுக்கத்துடன் சேர்ந்து அதிக வெப்பமாக இருக்கும். அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியசும் வெப்பம் இருக்கும். மார்ச் முதல் மே வரை ஹாஜோவில் கோடைக்காலம். கோடைக்காலத்தின், சில நாட்களில், ஹாஜோவில் மழை பொழிவும் இருக்கும்.

மழைக்காலம்

ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை ஹாஜோவில் மழைக்காலம். இந்த சமயத்தில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும், புதுவிதமான தோற்றத்துடன் எழில் நிறைந்து காணப்படுகிறது ஹாஜோ நகரம்.

குளிர்காலம்

நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை ஹாஜோவில் குளிர்காலம். அதிகபட்சமாக 25 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 7 டிகிரி செல்சியசும் வெப்பம் இருக்கும். மிகவும் இதமான சூழ்நிலை இருக்கும் குளிர்காலத்தில், ஹாஜோவின் அழகை ரசிக்க சிறப்பானதாக இருக்கும்.