Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹால்டியா » வானிலை

ஹால்டியா வானிலை

ஹால்டியாவிற்கு சுற்றுலா வருவதற்கு சிறந்த காலமாக கருதப்படுவது பருவமழைக்காலம் மற்றும் குளிர் காலம் தொடங்கும் பருவமாகும்.

கோடைகாலம்

ஹால்டியாவின் கோடைக்காலத்தில் தட்பவெப்ப நிலை 38 டிகிரி செல்சியஸ் வரை செல்வதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உணரப்படும். மேலும் ஹால்டியா நகரம் எப்போதுமே ஈரப்பதத்துடன் இருக்கும்.

மழைக்காலம்

மழைக்காலத்தில் லேசான முதல் பலமான மழை பெய்யக்கூடும். இக்காலத்தில் இயற்களை அழகுடன் இந்த இடம் பசுமையாய் இருப்பதால் இந்நேரம் இங்கு சுற்றுலா வருவதே உகந்த நேரமாக இருக்கும். வங்காள விரிகுடாவில் மோசமான வானிலை நிலவினால் இங்கே பலமான காற்று வீசக்கூடும்.

குளிர்காலம்

ஹால்டியாவில் குளிர் காலம் இனிமையாகவும் இதமானதாகவும் இருக்கும். இக்காலத்தில் இங்கே குறைந்தபட்சமாக 14 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை செல்லும்.