Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹலேபீடு » வானிலை

ஹலேபீடு வானிலை

அக்டோபர் மற்றும் ஏப்ரல் மாதங்கள் ஹலேபீடு சுற்றுலாஸ்தலத்துக்கு விஜயம் ஏற்ற காலமாக கருதப்படுகின்றன. தீபாவளிப்பண்டிகை (அக்டோபர்), மஹாசிவராத்திரி (பிப்ரவரி/மார்ச்), ஹொய்சள மஹோத்சவம் (மார்ச்) போன்றவை திருவிழாக்கள் இங்கு பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு பயணிகளையும் அதிக அளவில் ஈர்க்கின்றன.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : கோடைக்காலத்தில் ஹலேபீடு பகுதியின் பகல் வெப்பநிலை 370C வரை உள்ளது. இரவில்  240C ஆக உள்ளது. உஷ்ணம் கடுமையாக இருக்கும் கோடைக்காலத்தை பயணிகள் தவிர்க்கின்றனர். ஸ்தலங்களை சுற்றிப்பார்ப்பது இக்காலத்தில் மிக அசௌகரியமாக இருக்கும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : மழைக்காலத்தில் மிதமான மழைப்பொழிவையே பெறும் ஹலேபீடு பகுதி இக்காலத்தில் கடுமையான ஈரப்பதத்துடன் காணப்படுவதால் பயணிகளுக்கு மழைக்காலம் உகந்ததாக இல்லை.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை) : ஹலேபீடு நகரம் குளிர்காலத்தில் மிதமான குளிருடன் இதமான இனிமையான சூழலுடன் காணப்படுகிறது. இக்காலத்தில் இங்கு வெப்பநிலை அதிகபட்சம் 190C ஆகவும் குறைந்தபட்சமாக 300C ஆகவும் உள்ளது.  குளிர்காலத்தில் ஹலேபீடுக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.