Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹர்சில் » வானிலை

ஹர்சில் வானிலை

ஹர்சிலுக்கு சுற்றுலா செல்ல ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களும், செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான 3 மாதங்களும் உகந்ததாக கருதப்படுகின்றன.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை): ஹர்சிலின் கோடைகாலம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி ஜூன் மாதத்தில் முடிவடைகிறது.  இந்த பருவத்தில் ஹர்ஷிலின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 15 ° C மற்றும் 10 ° C ஆகும். கோடை காலத்தில் இதமான சூழ்நிலை நிலவுவதால் இப்பருவமே ஹர்சிலை சுற்றிப்பார்க்க ஏற்ற காலமாகும்.  இக்காலத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களுடன்  கம்பளி ஆடைகளை எடுத்து  செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழைக்காலம்

(ஜூலை முதல் ஆகஸ்ட் வரை ): மழைகாலத்தில், இங்கு அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்பட்டு, சாலைகளில் தடைகள் உருவாகும். எனவே, சுற்றுலா பயணிகள் பருவமழை காலத்தில் ஹர்சிலை பார்வையிடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எது எவ்வாறாயினும், ஹர்சிலின் பசுமையை இக்காலத்தில் மட்டுமே அனுபவிக்க முடியும்.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை): ஹர்சிலின் குளிர்காலம் அக்டோபரில்  தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும். இந்த நேரத்தில், இவ்விடத்தின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே, 10 ° C மற்றும் 0° C ஆகும் . குளிர்காலத்தில் ஹர்சிலில்  கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவதுண்டு.