Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹஸ்தினாபூர் » வானிலை

ஹஸ்தினாபூர் வானிலை

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவமே ஹஸ்தினாபூர் நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இதர மாதங்களில் கடும் வெப்பமும் வறட்சியும் நிலவுகிறது. இருப்பினும்  ஒரு முக்கியமான யாத்ரீக ஸ்தலமாக இருப்பதால் இது வருடமுழுதுமே பயணிகள் வருகையை கொண்டிருக்கிறது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : ஹஸ்தினாபூர் நகரத்தில் மார்ச் மாதம் துவங்கும் கோடைக்காலம் மே மாதம் வரையில் நீடிக்கின்றது. கோடைக்காலத்தின் குறைந்தபட்சமாக 32°C  முதல் அதிகபட்சமாக 45°C  வரை வெப்பநிலை செல்லக்கூடும். பொதுவாக கோடைக்காலத்தில் 36°C  வெப்பநிலை சராசரியாக காணப்படுகிறது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : எல்லா இந்திய நகரங்களையும் போலவே ஹஸ்தினாபூர் பகுதியும் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மழைக்காலத்தை பெறுகிறது. இக்காலத்தில் சூழல் ஈரமாகவும் காற்றில் ஈரப்பதம் அதிகம் நிரம்பியும் காணப்படும். பொதுவாக வெப்பநிலை குறைந்தே இருக்கும்.

குளிர்காலம்

 (டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை ஹஸ்தினாபூர் நகரத்தில் குளிர்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் இனிமையான குளுமையான சூழலுடன் இப்பகுதி காணப்படுகிறது.