குருத்வாரா ஹேம்குந்த் சாஹிப் என்பது சீக்கியர்களுக்கான ஒரு புனித ஸ்தலமாகும். இது ஹேம்குந்த் ஏரிக்கரையில் அமைந்துள்ளது. சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங் இங்கு நீண்ட வருடம் தியானத்தில் இருந்ததால் இந்த இடம் சமயஞ்சார்ந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கோவிலுக்குள் செல்லும் முன் சீக்கியர்கள் அதனருகில் இருக்கும் ஏரியில் உள்ள புனித நீரில் முழுகுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். இந்த ஏரியின் நீர் மிகவும் குளிர்ந்த நிலையில் இருக்கும்.
இங்கு குளிக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி தனி அறைகள் உண்டு. பக்தர்கள் அருகில் இருக்கும் கடைகளில் நினைவு பொருட்களை வாங்கிச் செல்லலாம். குருத்வாராவின் உள்ளே பக்தர்கள் கூடியவுடன் அவர்களுக்கு டீயும் கிச்ரியும் கொடுக்கப்படும்.
இதனுடன் சேர்ந்து சரிசமமான அளவில் கலந்த சர்க்கரை, கோதுமை மாவு மற்றும் நெய்யால் செய்த கராஹ் பர்ஷத் என்னும் பலகாரமும் வழங்கப்படும்.
பக்தர்கள் உள்ளே கூடியதும், சீக்கியர்கள் கடவுளை வணங்கிவிட்டு பின்னர் குரு கிரந்த் சாஹிப் புத்தகத்தில் இருந்து எதாவது ஒரு பக்கத்தை திறந்து மேலிருந்து இடது பக்கமாக படிக்கத் தொடங்குவர்.
இந்திய இராணுவத்தில் முதன்மை பொறியாளராக இருந்த மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் இந்த இடத்தை பார்வையிட வந்த போது, இந்த குருட்வாராவை 1960 ஆம் ஆண்டு கட்டினார். பின்னர் கட்டட கலைஞர் சியாலி என்பவர் தான் இதன் கட்டுமான பணியை நிர்வாகித்தார்.



Click it and Unblock the Notifications