Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஓசூர் » வானிலை

ஓசூர் வானிலை

ஓசூர் நகருக்கு அதன் குளிர்க்காலமான அக்டோபர் முதல் பிப்ரவரி மாதங்கள் வரையிலான காலங்களில் சுற்றுலா வருவது சிறந்த அனுபவத்தை தரும்.

கோடைகாலம்

கோடைக்காலத்தின் பெரும்பான்மையான பகுதி இனிமையாகவும் உலர்வாகவும் இருக்கின்றது. அதிகமான தொழிற்சாலை மயமாக்குதலால் கோடை வெப்பம் சிறிது சிறிதாக அதிகரித்து வருகின்றது. மார்ச் முதல் மே மாதம் வரை நீடிக்கும் கோடைக்கால தட்பவெப்பம் 20°C முதல் 35°C வரை காணப்படுகிறது.

மழைக்காலம்

ஓசூரில் மழைக்காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் இறுதியில் நிறைவுபெறுகின்றது. இந்தக் காலங்களில் தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவக்காற்றின் காரணமாக பெய்யும் மழையானது கோடை காலத்தின் வெப்பத்தை பெருமளவு தணிக்கிறது.

குளிர்காலம்

ஓசூர் குளிர்க்காலத்தின் போது 12-24°C தட்பவெப்பத்தை பெற்று இருக்கின்றது. இந்த நகரில் குளிர்க்காலம் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இக்காலத்தில் மற்ற காலங்களை விட அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வரத்து காணப்படுகிறது.