Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவுக்குள்ளேயே ஒரு பாரின் டூர்

இந்தியாவுக்குள்ளேயே ஒரு பாரின் டூர்

பயணம் செய்ய பிடிக்கும் எல்லோருக்கும் இருக்கும் கனவுகளில் ஒன்று வாழ்கையில் ஒருமுறையேனும் ஐரோப்பிய நாடுகள் முழுக்க சுற்றிப்பார்க்க வேண்டும் என்பது தான். சற்றும் மாசுபடாத பசுமை, கலையழகு மிகுந்த தொன்மையான கட்டிடங்கள், நாகரீகம் மிக்க மக்கள் என இங்கு நிறைந்திருக்கும் நல்ல விஷயங்களுக்கு அளவே இல்லை.

இருந்தாலும் இப்படி ஐரோப்பா செல்வதெல்லாம் அனைவருக்கும் சாத்தியப்படக்கூடியது இல்லை என்பதால் இந்தியாவில் ஐரோப்பிய நகரங்களுக்கு இணையாக இருக்கும் இடங்களுக்கு அருமையான ஒரு சுற்றுலா போகலாம் வாங்க...

ஆலப்புழா - வெனிஸ் :

ஆலப்புழா - வெனிஸ் :

இத்தாலியில் இருக்கும் வெனிஸ் நகரம் ஐரோப்பாவின் முதன்மையான சுற்றுலாத்தலங்களில் ஒன்று. சுற்றிலும் நீரினால் சூழப்பட்ட 118 குட்டி குட்டி தீவுகளை உள்ளடக்கிய நகரமான வெனிஸ் நகரினுள் படகுகள் மூலம் மட்டுமே பயணிக்க முடியும். அழகும், பராம்பரியமும் மிக்க இந்நகரம் தேனிலவு செல்ல விரும்புகிறவர்களின் சொர்க்கமாகும்.

Photo:Saffron Blaze

ஆலப்புழா - வெனிஸ் :

ஆலப்புழா - வெனிஸ் :

இந்த வெனிஸ் நகருக்கு ஒப்பான அழகுடைய இந்திய நகரமென்றால் அது கேரளத்தில் இருக்கும் ஆலப்புழா தான். அலைகள் எழாத உப்பங்கழி (Back Waters) ஓடைகளால் சூழப்பட்டிருக்கும் இந்நகரம் 'கிழக்கின் வெனிஸ்' என்ற புனைப்பெயராலும் அழைக்கப்படுகிறது. இங்கிருக்கும் சுற்றுலா அம்சங்களை பற்றி அடுத்த பக்கத்தில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Photo: Flickr

ஆலப்புழா - வெனிஸ் :

ஆலப்புழா - வெனிஸ் :

ஆலப்புழாவின் முக்கிய சுற்றுலா அம்சமாக இருப்பது படகு வீடுகள் தான். அலைகள் எழாத நீரோடைகளில் இந்த படகு வீடுகளில் மிதந்தபடியே பயணிப்பது ஒரு அலாதியான அனுபவமாக இருக்கும். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நிகரான வசதிகள் இந்த படகு வீடுகளில் செய்யப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலப்புழா - வெனிஸ் :

ஆலப்புழா - வெனிஸ் :

இதுமட்டுமில்லாமல் வெனிஸ் நகரில் இருப்பது போன்றே பழமையான கட்டிடங்களும் இங்கே உண்டு. குறிப்பாக 1862ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆலப்புழா கடற்கரை கலங்கரை விளக்கம் சுற்றுலாப்பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்றாகும்.

Photo: Dr. Ajay Balachandran

ஆலப்புழா - வெனிஸ் :

ஆலப்புழா - வெனிஸ் :

அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில், மன்னரசலா கோயில், மிகப்பழமையான சி.எஸ்.ஐ சர்ச் போன்ற இடங்களும் ஆலப்புழாவில் இருக்கின்றன.

ஆலப்புழா - வெனிஸ் :

ஆலப்புழா - வெனிஸ் :

மலையாளிகளின் முக்கிய பண்டிகையான ஓணத்தின் போது ஆலப்புழாவில் உள்ள புன்னமடா ஏரியில் பிரசித்திபெற்ற பாம்பு படகு போட்டி நடைபெறுகிறது. நம்ம ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு நிகரான உற்சாகத்துடன் நடக்கும் இப்போட்டிகளை வாய்ப்பிருந்தால் ஒருமுறை நேரில் சென்று கண்டுகளியுங்கள்.

Photo: Arun Sinha

ஆலப்புழா - வெனிஸ் :

ஆலப்புழா - வெனிஸ் :

ஆலப்புழா செல்லும் அனைவரும் கண்டிப்பாக சுவைக்க வேண்டிய உணவு 'கரீமீன்' ஆகும். ஆலப்புழாவின் நன்னீர் ஓடைகளில் கிடைக்கும் இந்த மீன்கள் தேங்காய் எண்ணையில் பொறித்து பரிமாறப்படுகின்றன.

Photo: e900

ஆலப்புழா - வெனிஸ் :

ஆலப்புழா - வெனிஸ் :

ஆலப்புழா கடற்கரையில் ஒரு இனிய சூரிய உதயம்.

Photo: Vishnu Nair

ஆலப்புழா - வெனிஸ் :

ஆலப்புழா - வெனிஸ் :

ஆலப்புழா நகரை பற்றிய மேலதிக தகவல்களையும் அங்கிருக்கும் தாங்கும் விடுதிகள் பற்றிய தகவல்களையும் தமிழின் முன்னணி பயண இணையதளமான தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்.

பாண்டிச்சேரி - பிரான்ஸ் :

பாண்டிச்சேரி - பிரான்ஸ் :

எப்போதாவது பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் நடந்தால் பாண்டிச்சேரியில் உள்ள பள்ளிகளில் ஒட்டு போட கூட்டம் வரிசையில் நிற்கும். பாண்டிச்சேரியில் வாழும் பிரான்ஸ் குடிமக்கள் அவர்கள். இந்தியா முழுக்கவே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் இருந்த போது சோழ மண்டல கடற்கரையில் இருக்கும் குட்டி நகரமான பாண்டிச்சேரி பிரான்சின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.

Photo: Flickr

பாண்டிச்சேரி - பிரான்ஸ் :

பாண்டிச்சேரி - பிரான்ஸ் :

பிரான்சின் ஆட்சி 50 ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து விட்டாலும் இன்றும் அவர்கள் விட்டுசென்ற விஷயங்கள் பாண்டிசேரியில் அப்படியே தான் இருக்கின்றன. இந்த குட்டி பிரான்சை பற்றி அறிந்து கொள்ள அடுத்த பக்கத்துக்கு வாருங்கள்.

Photo: Flickr

பாண்டிச்சேரி - பிரான்ஸ் :

பாண்டிச்சேரி - பிரான்ஸ் :

நேர்த்தியான தெருக்கள், அகலமான சுத்தமான சாலைகள், பிரஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கலைநயமிக்க கட்டிடங்கள் என பாண்டிச்சேரிக்குள் நுழைந்ததுமே ஒரு வித்தியாசத்தை நாம் கண்கூடாக பார்க்க முடியும். ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போன்றே தரமான, நன்றாக பராமரிக்கபப்டும் சுற்றுலாத்தலங்களும் இங்கே ஏராளமாக உண்டு.

Photo:Patrik M. Loeff

பாண்டிச்சேரி - பிரான்ஸ் :

பாண்டிச்சேரி - பிரான்ஸ் :

ஆரோவில்லே :

இன, மொழி, மத வேறுபாடுகளை கடந்து உலக மக்கள் யாவரும் ஒன்றாய் இனிமையாய் வாழ வேண்டும் என்ற உயர்ந்த தொலைநோக்கு எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்டதே இந்த ஆரோவில்லே சர்வதேச நகரமாகும். பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த நகரினுள் பல்வேறு நாட்டவர்களும் ஒன்றாக வாழ்வதை நாம் கண்கூடாக காண முடியும்.

பாண்டிச்சேரி - பிரான்ஸ் :

பாண்டிச்சேரி - பிரான்ஸ் :

இந்த ஆரோவில்லே நகருக்கு சென்று சுற்றிப்பார்க்க விரும்புகிறவர்கள் 2 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். இந்த நகரின் மையத்தில் உள்ள தங்க பந்து போன்ற மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடலாம். வெளிநாட்டவருடன் உரையாடலாம் மேலும் இங்கே உள்ள கடையில் கிடைக்கும் வேலைப்பாடுகள் நிறைந்த கைவினைப்பொருட்களை வாங்கிச்செல்லலாம்.

பாண்டிச்சேரி - பிரான்ஸ் :

பாண்டிச்சேரி - பிரான்ஸ் :

விடுமுறை நாளொன்றில் மக்கள் கூட்டத்தில் திளைக்கும் பாண்டிச்சேரி கடற்கரை.

Photo: Wikipedia

பாண்டிச்சேரி - பிரான்ஸ் :

பாண்டிச்சேரி - பிரான்ஸ் :

பாண்டிச்சேரியில் இருக்கும் பிரத்தி பெற்ற கோயில்களுள் ஒன்றான மணக்கோல விநாயகர் கோயிலில் அக்கோயில் யானையிடம் ஆசிர்வாதம் பெரும் பக்தர் ஒருவர்.

பாண்டிச்சேரி - பிரான்ஸ் :

பாண்டிச்சேரி - பிரான்ஸ் :

பாண்டிச்சேரியில் இருக்கும் மற்ற சுற்றுலாத்தலங்கள் பற்றிய தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo: Flickr

வாகமன் - ஸ்காட்லாந்து :

வாகமன் - ஸ்காட்லாந்து :

இங்கிலாந்து நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் ஸ்காட்லாந்து அதன் நவ நாகரீக கலாச்சாரத்துக்கும், பசுமை கொஞ்சும் இயற்கை அழகு கொண்ட இடங்களுக்கும் பெயர் போனது. இந்த நாட்டைப் போலவே இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் இடத்தை பற்றி தெரியுமா உங்களுக்கு?.

Photo: Flickr

வாகமன் - ஸ்காட்லாந்து :

வாகமன் - ஸ்காட்லாந்து :

இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று செல்லமாக அழைக்கப்படும் வாகமன், கேரளா மாநிலத்தில் கோட்டயம் இடுக்கி மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் அற்புதமான மலை வாசஸ்தலம். குளுமையான கால நிலை, மலையேற்றம், பாறை ஏற்றம் மற்றும் பாராக்ளிடிங் செய்ய தகுந்த புவியமைப்பு, தங்கல் பாறா, வாகமண் ஏரி, சூசைட் பாயிண்ட், வாகமண் அருவி போன்ற அற்புதமான சுற்றுலாத்தலங்கள் என கேரளாவின் மற்றுமொரு அற்புதமான சுற்றுலாத்தலமாக வளர்ந்து வருகிறது.

Photo:Bibin C.Alex - Bibinca

வாகமன் - ஸ்காட்லாந்து :

வாகமன் - ஸ்காட்லாந்து :

எந்த தொந்தரவும் இல்லாமல் வர்த்தகத்தனங்கள் இன்றி அமைதியாக ஒரு மலைவாசஸ்தலத்திற்கு செல்ல வேண்டும் ஆனால் அப்படி ஒரு இடமுமே இல்லையே என நினைப்பவரானால் நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டிய இடம் இந்த வாகமன் தான். இயற்கை காட்சிகள் நிறைந்த பள்ளத்தாக்குகள், பசுமை போர்வை போர்த்தியது போன்ற தேயிலை தோட்டங்கள், பைன் மரக்காடுகள், அருவிகள் என இங்கே ஒரு இயற்கை அழகுப்புதையலே இருக்கிறது.

Photo:Madhu Kannan

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X