Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் ஒரு ஜங்கிள் புக் சுற்றுலா !!

இந்தியாவில் ஒரு ஜங்கிள் புக் சுற்றுலா !!

By Naveen

கல்யாண் ஜுவல்லரி விளம்பரம் மாதிரி "நான் அங்க போனதுக்கு அப்புறம் குழந்தையா மாறினேன்" என எல்லோரையும் சொல்ல வைத்த படம் சமீபத்தில் வெளியான 'ஜங்கிள் புக்' ஆகும். பத்து வருடங்களுக்கு முன்னே நம்மையெல்லாம் டீ.வி முன்பு கட்டிபோட்ட ஜங்கிள் புக்கை 3D திரையரங்கில் பார்த்த பின்பு விலங்குகள் மீது நம்மையறியாமல் பாசம் ஏற்பட்டதை மறுக்க முடியாது.

குழந்தைகளுக்கோ கோடை விடுமுறை விட்டாகிவிட்டது. இந்த சமயத்தில் சில நாட்கள் நீங்களும் விடுமுறை போட்டுவிட்டு ஏன் திரையில் பார்த்தவற்றை நேரில் பார்த்துவிட்டு வரக்கூடாது?. வாருங்கள், இந்தியாவில் இருக்கும் சிறந்த வனவிலங்கு சரணாலயங்களுக்கு ஒரு ஜாலி 'ஜங்கிள் புக்' சுற்றுலா போவோம்.

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா:

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா:

இந்தியாவில் இருக்கும் மிகவும் பழமையான தேசிய பூங்காவான இது 1936ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மிகவும் அருகி வரும் உயிரினமான வங்கப்புலிகளை பாதுக்காக்கும் பொருட்டு 'ஜிம் கார்பெட்' என்ற ஆங்கிலேயரால் இது ஏற்ப்படுத்தப்பட்டது.

Roshan Panjwani

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா:

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா:

இந்த தேசிய பூங்கா உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிதால் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. சூழல் சுற்றுலாவுக்கு மிகவும் ஏற்ற இடமான ஜிம் கார்பெட் தேசிய பூங்காவினுள் மட்டும் மொத்தம் 488க்கும் மேற்ப்பட்ட விலங்குகளும் தாவர வகைகளும் இருக்கின்றன.

Allan Hopkins

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா:

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா:

வனவிலங்குகளை அதன் வாழ்விடங்களிலேயே எந்தத்தொந்தரவும் செய்யாமல் பார்த்து ரசிக்க இந்தியாவிலேயே மிகச்சிறந்த இடமாக ஜிம் கார்பெட் தேசிய பூங்கா சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் இங்கே 70,000க்கும் மேற்ப்பட்ட சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saad Akhtar

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா:

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா:

ஒருவேளை உங்களுக்கு இங்கே வங்கப்புலியை பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தால் உங்களை மிகுந்த அதிர்ஷ்டசாலியாக கருதிக்கொள்ளுங்கள். ஏனென்றால் அதீத தனிமை விரும்பியான புலிகளை காணக்கிடைப்பது அரிதிலும் அரிதாகும்.

கொடைகாலாமான மார்ச் முதல் ஜூன் வரை தண்ணீர் தேடி புலிகள் அதிகம் வெளியே வரும் என்பதால் இந்த காலட்டத்தில் புலிகளை காணக்கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.

Rennett Stowe

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா:

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா:

இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அனுபவம் வாய்ந்த வழிகாட்டி ஒருவரின் உதவியுடன் ஜீப்பிலே அல்லது யானை மீது சவாரி செய்தபடியோ வனவிலங்குகளை நேரில் கண்டு மகிழலாம்.

அதோடு இந்த பூங்காவினுள் மலையேற்றம் மற்றும் ராப்டிங் எனப்படும் மிதவைப்படகில் சாகச சவாரி செய்யும் அம்சமும் உள்ளன.

Meghana Kulkarni

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா:

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா:

இந்த பூங்காவிற்கு செல்ல விரும்புகிறவர்கள் முதலில் டெல்லியை சென்றடைந்து அங்கிருந்து 235 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும்ஜிம் கார்பெட் தேசிய பூங்காவை ஆறு மணிநேர பயணத்தில் சென்றடையலாம்.

ஜிம் கார்பெட் தேசிய பூங்காவை பற்றிய மேலும் பல பயனுள்ள பயண தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Ranna M V

காசிரங்கா தேசிய பூங்கா:

காசிரங்கா தேசிய பூங்கா:

உலகில் இருக்கும் மொத்த ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களில் 70% வசிப்பது இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ளகாசிரங்கா தேசிய பூங்காவில் தான்.

அதுமட்டுமில்லாமல் உலகிலேயே அதிக அடர்த்தியில் புலிகள் வாழும் பகுதியாகவும்காசிரங்கா தேசிய பூங்கா திகழ்கிறது.

Subharnab Majumdar

காசிரங்கா தேசிய பூங்கா:

காசிரங்கா தேசிய பூங்கா:

காண்டாமிருகங்கள்,புலிகள் மட்டுமில்லாமல் அரியவகை பறவைகளின் வாழ்விடமாகவும் சர்வதேச பறவைகள் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

கிழக்கு இமயமலையில் அமைந்திருக்கும் காசிரங்கா தேசிய பூங்கா பல்லுயிர் வாழ்கையின் முக்கிய ஸ்தலமாக இயற்கை ஆர்வலர்களாலும், சுற்றுலாப்பயணிகளாலும் அறியப்படுகிறது.

Subharnab Majumdar

காசிரங்கா தேசிய பூங்கா:

காசிரங்கா தேசிய பூங்கா:

மிகவும் அரிய விலங்குகளும், பறவைகளும் வாழும் இந்த பூங்காவிற்கு விலங்களை பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வமுடையவர்களும், புகைப்படக்காரர்களும் அதிகம் வருகின்றனர்.

யானை சவாரி செய்தபடியோ, ஜீப்பில் பயணம் செய்தபடியோ காண்டாமிருங்கங்களையும், புலிகளையும் நேரில் காணலாம்.

Subharnab Majumdar

காசிரங்கா தேசிய பூங்கா:

காசிரங்கா தேசிய பூங்கா:

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை இந்த பூங்காவிற்கு வர உகந்த நேரமாகும். பருவமழை பொழிவின் காரணமாக மே-அக்டோபர் வரைகாசிரங்கா தேசிய பூங்கா மூடப்படுகிறது.

சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கு வசதியாக பூங்காவிற்கு அருகிலேயே அஸ்ஸாம் அரசாங்கத்தால் நடத்தப்படும் காட்டேஜ் விடுதிகள் இருக்கின்றன.

Rita Willaert

காசிரங்கா தேசிய பூங்கா:

காசிரங்கா தேசிய பூங்கா:

காசிரங்கா தேசிய பூங்காவை பற்றிய மேலும் பல தகவல்களை தமிழில் இருக்கும் ஒரே முழுமையான பயண இணையதளமான தமிழ் நேடிவ் பிளானட்டில் தெரிந்துகொள்ளுங்கள்.

Rocky Barua

காசிரங்கா தேசிய பூங்கா:

காசிரங்கா தேசிய பூங்கா:

சமீபத்தில் இந்தியா வந்திருந்த இங்கிலாந்து இளவரசரின் மகன் வில்லியம்ஸ் மற்றும் கேத்ரரின் ஆகியோர் காசிரங்கா தேசிய பூங்காவை சுற்றிப்பார்த்தனர்.

British High Commission

பந்திப்பூர் தேசிய பூங்கா:

பந்திப்பூர் தேசிய பூங்கா:

ஒரு காலத்தில் மைசூர் மகாராஜாவின் வேட்டைக்காடாக இருந்த இடம் இன்று புலிகளை பாதுக்காக்கும் தேசிய பூங்காவாக திகழ்கிறது. இது கர்நாடக மாநிலத்தில் தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் முதுமலை தேசிய பூங்கா மற்றும் வயநாடு வனவிலங்கு சரணாலயங்களை ஒட்டி அமைந்திருக்கிறது.

Sundaresh Ramanathan

பந்திப்பூர் தேசிய பூங்கா:

பந்திப்பூர் தேசிய பூங்கா:

வடக்கே கபினி ஆறும், தெற்கே மொயார் ஆறும் பாய்ந்தோட என்றும் பசுமையாக காட்சியளிக்கும் பந்திப்பூர் தேசியப் பூங்காவினுள் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், முதலைகள், நரிகள் போன்ற பல்வேறு விலங்குகள் வாழ்கின்றன.

Sundaresh Ramanathan

பந்திப்பூர் தேசிய பூங்கா:

பந்திப்பூர் தேசிய பூங்கா:

பெங்களூருவில் வசிப்பவர்கள் வார விடுமுறையில் செல்ல மிகச்சிறந்த இடமாகும். இந்த பூங்கா பெங்களூருவில் இருந்து வெறும் 230கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.

பெங்களூரில் இருந்து மைசூரை அடைந்து அங்கிருந்து குண்டுப்பேட்டே வழியாக பந்திப்பூரை அடையலாம்.

Sundaresh Ramanathan

பந்திப்பூர் தேசிய பூங்கா:

பந்திப்பூர் தேசிய பூங்கா:

பந்திப்பூர் தேசிய பூங்காவினுள் இருக்கும் மிகவும் உயரமான சிகரமான ஹிமவாத் கோபாலசுவாமி பேட்டா மலையின் மேல் அமைந்திருக்கும் கோயில்.

Dhruvaraj S

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X