Search
  • Follow NativePlanet
Share
» »பீமனின் மனைவி கடவுளாக வணங்கப்படும் கோயில் எது தெரியுமா?

பீமனின் மனைவி கடவுளாக வணங்கப்படும் கோயில் எது தெரியுமா?

By Naveen

இன்று நம் வீட்டு சுட்டிகளையெல்லாம் தொலைக்காட்சி முன்பு கட்டிப்போடும் 'சோட்டா பீம்' சித்திர தொடரின் நாயகனான இருக்கும் பீமன் உண்மையில் நூறு யானைகளின் பலம் பொருந்திய ஆஜானுபாகுவான உடல் கொண்டவன். பாண்டவர்களில் இரண்டாவது பெரிய சகோதரன். கதாயுத யுத்தத்தில் கிருஷன பகவானின் சகோதரனான பலராமருக்கு நிகரானவன்.

சூதின் சூழ்ச்சியில் வீழ்ந்த பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாச காலத்தின் போது இப்போதைய கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கைவாரா என்ற ஊருக்கு வருகின்றனர். அங்கே மக்களை துன்புறுத்தி வந்த பகாசுரன் என்ற அரக்கனை பீமன் வதைத்துவிடுகிறானர். பின்னர் பகாசுரனின் தங்கையான அரக்கி ஹிடும்பியை மணக்கிறார்.

பீமனுக்கும் ஹிடும்பிக்கும் பிறந்த மகனே கடோத்கஜன் ஆவார். இந்த ஹிடும்பிக்கு ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தலைநகரான சிம்லாவில் ஒரு கோயில் ஒன்று உள்ளது. அக்கோயிலை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்துகொள்ளலாம் வாருங்கள்.

ஹிடும்பி கோயில் - எங்கே அமைந்திருக்கிறது?:

ஹிடும்பி கோயில் - எங்கே அமைந்திருக்கிறது?:

பீமசேனனின் மனைவியான அரக்க குலத்தை சேர்ந்த ஹிடும்பிக்கான கோயில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அதன் தலைநகரான மணாலியில் தேவதாரு மரங்கள் சூழ்ந்த ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவே அமைந்திருக்கிறது.

Bhadviya

ஹிடும்பி கோயிலின் புராண வரலாறு:

ஹிடும்பி கோயிலின் புராண வரலாறு:

மகாபாரத காலத்தில் வனவாசத்தின் போது பாண்டவர்கள் அடர்ந்த வனப்பகுதியான மணாலியில் சில காலம் தங்கியிருந்தனராம். அப்போது தன்னுடைய அண்ணனான ஹிடும்பனை வீழ்த்தும் வீரனையே மணந்துகொள்வேன் என்று சபதமேற்றிருந்த ஹிடும்பியை மணக்க விரும்பிய பீமன் பெரும்பலம் பொருந்திய ஹிடும்பனை வீழ்த்தி அரக்கி ஹிடும்பியை திருமணம் செய்துகொள்கிறார்.

Viraat Kothare

ஹிடும்பி கோயிலின் புராண வரலாறு:

ஹிடும்பி கோயிலின் புராண வரலாறு:

பீமனும் ஹிடும்பியும் இந்த கோயில் அமைந்திருக்கும் இடத்தில் தான் திருமணம் செய்து இல்லறம் நடத்தியிருக்கின்றனர். இவர்களுக்கு மகனாக பிறந்தவர் தான் குருக்ஷேத்திர யுத்தத்தில் கௌரவ படைகளுக்கு பெரும் நாசம் விளைவித்த கடோத்கஜன் ஆவார்.

ஹிடும்பி கோயிலின் புராண வரலாறு:

ஹிடும்பி கோயிலின் புராண வரலாறு:

வனவாசம் முடிந்த பிறகு பீமனுடன் ஹஸ்தினாபுரம் செல்லாமல் இங்கேயே தங்கிய ஹிடும்பி தனது மகனான கடோத்கஜன் பெரியவனாகி நாட்டை ஆளும் வயது வந்தவுடன் சந்நியாசம் பூண்டு பல ஆண்டுகள் தவத்தில் ஈடுபட்டு முக்தியடைகிறார்.

Pdhang

ஹிடும்பி கோயிலின் அமைப்பு:

ஹிடும்பி கோயிலின் அமைப்பு:

ஹிடும்பி கோயிலானது மிகப்பெரியதொரு பாறையின் மேல் அமைந்துள்ளது. இந்த கோயில் கி.பி 1553ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இக்கோயிலின் கருவறையினுள் உருவச்சிலை இல்லை. அதற்கு பதிலாக ஹிடும்பியின் பாதம் போன்ற வடிவிலான மிகப்பெரியதொரு பாறையே இருக்கிறது.

Sayantan07

ஹிடும்பி கோயிலின் அமைப்பு:

ஹிடும்பி கோயிலின் அமைப்பு:

இந்த கோயிலில் இருந்து 70மீ தொலைவில் ஹிடும்பி-பீமனின் மகனான கடோத்கஜனின் சிறிய கோயில் ஒன்றும் இருக்கிறது.

Jayasree Sengupta

எவ்வளவு தூரம்:

எவ்வளவு தூரம்:

இந்த கோயில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தலைநகரான சிம்லாவின் இருந்து 111கி.மீ தொலைவில் உள்ளது. அடர்த்தியான மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு செல்ல கோடை காலம் உகந்த நேரமாகும்.

Divas wahi

பீமன்:

பீமன்:

பாகாசுரனை வதைக்கும் பீமன் !!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X