Search
  • Follow NativePlanet
Share
» »குமரி - மதுரை - ராமேஸ்வரம்: 2 நாட்களில் முழுக்க முழுக்க ரயிலில்!

குமரி - மதுரை - ராமேஸ்வரம்: 2 நாட்களில் முழுக்க முழுக்க ரயிலில்!

வடமாநிலத்தவர்களும் சரி, தமிழகத்தின் வடக்கு பகுதியிலிருக்கும் மக்களும் சரி கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருவதற்கு மிகவும் விரும்புவார்கள். ஆனால் செலவைப் பற்றிய பயம்தான் அவர்களுக்கு அதிகம் இருக்கும். நான்க

By Udhaya

வடமாநிலத்தவர்களும் சரி, தமிழகத்தின் வடக்கு பகுதியிலிருக்கும் மக்களும் சரி கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருவதற்கு மிகவும் விரும்புவார்கள். ஆனால் செலவைப் பற்றிய பயம்தான் அவர்களுக்கு அதிகம் இருக்கும். நான்கு பேர் கொண்ட குடும்பமாக இருந்தால் பரவாயில்லை எப்படியாவது சமாளித்துவிடலாம். குடும்பத்தோடு சேர்ந்து பத்து பதினைந்து பேர் பயணிக்க வேண்டுமென்றால் தனியாக ஒரு வண்டியை வாடகைக்கு எடுக்கவேண்டுமே.. பேருந்து கட்டணம் வேறு அதிகம். அந்த கவலையிலேயே கன்னியாகுமரிக்கு வருவதையே கனவாக மட்டும் கொண்டிருப்பார்கள். சரி ரயிலில் பயணிக்கலாம் என்றால் இன்னுமொரு சிக்கல். நேர மேலாண்மை இல்லை. இரண்டு நாள்கள்தான் விடுமுறை அதற்கு மேல் நிச்சயம் முடியாது என்று நினைப்பவர்களா நீங்கள். கவலையை விடுங்க.. ரெண்டே நாளில் மொத்த இடங்களையும் சுத்தி பாக்கலாம். கன்னியாகுமரி - மதுரை - ராமேஸ்வரம். அதுவும் ரயிலில் குறைந்த கட்டணத்தில்...

 ரயில் விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்

ரயில் விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்

ரயிலில் பயணிப்பது பேருந்தைவிட சற்று தாமதிக்கும் என்றாலும் விலை குறைவானது.. மேலும் சிறியவர் பெரியவர்களுக்கும் வசதியானது. முதலில் ரயில் தகவல்களைத் தெரிந்து கொள்ளவேண்டும். கன்னியாகுமரியிலிருந்து மதுரைக்கும், மதுரையிலிருந்து ராமேஸ்வரத்துக்கும் நிறைய ரயில் வசதிகள் இருப்பதால், முதலில் நாம் நேரடியாக கன்னியாகுமரியை அடைந்துவிடுவது சிறந்தது.

இந்த பயணம் கன்னியாகுமரியிலிருந்து ஆரம்பிக்கிறது. கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த பயணத்தை ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு ராமேஸ்வரத்தில் நிறைவு செய்கிறோம். வார இறுதி அனைவருக்கும் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்த திட்டம்.

சென்னையிலிருந்தும், பெங்களூருவிலிருந்தும் கன்னியாகுமரிக்கு ரயில் சேவைகள் இருக்கின்றன.

Belur Ashok

 சென்னையிலிருந்து கன்னியாகுமரி

சென்னையிலிருந்து கன்னியாகுமரி

காலை 8.15க்கு குருவாயூர் விரைவு வண்டி

மாலை 5.15க்கு கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி

மாலை 7.50க்கு அனந்தபுரி விரைவு வண்டி ஆகியன அன்றாடம் பயணிகள் சேவைபுரியும் ரயில்கள் ஆகும்.

மற்றபடி இன்னும் நிறைய வாரம் ஒருமுறை, இருமுறை ரயில்களும் இருக்கின்றன. இதைப்போல பெங்களூரிலிருந்து

பெங்களூரு நாகர்கோயில் விரைவு வண்டி மாலை 5.15மணிக்கும், தீவு விரைவு வண்டி இரவு 8 மணிக்கும் அன்றாட ரயில்களாக இயக்கப்படுகின்றன. எது எப்படியானாலும் நீங்கள் கன்னியாகுமரியை மாலைக்குள் சென்றடைந்துவிடுங்கள்.

Raj

கன்னியாகுமரியில் சுற்றிப் பார்க்கவேண்டிய இடங்கள்

கன்னியாகுமரியில் சுற்றிப் பார்க்கவேண்டிய இடங்கள்

கலை மற்றும் பண்பாடுகளில் நாட்டம் இல்லாதவர்களுக்கு நிச்சயம் கன்னியாகுமரி உகந்த இடம் அல்ல. ஆயினும் கன்னியாகுமரியிலுள்ள கோயில்களும் கடற்கரைகளும் பல சுற்றுலாப் பயணிகளையும் புனித பயணம் செல்பவர்களையும் கவரும் வண்ணம் உள்ளன. விவேகானந்தர் பாறை, விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, வட்டகோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, வாவத்துறை, உதயகிரி கோட்டை மற்றும் காந்தி அருங்காட்சியகம், ஆகியவைகள் தான் இங்குள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்கள். இங்குள்ள முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் கன்னியாகுமரி கோயில், சித்தாறல் மலைக்கோயில் மற்றும் ஜெயின் நினைவுச் சின்னங்கள், நாகராஜ கோயில், சுப்பிரமணிய கோயில், திருநந்திக்கரை குகைக்கோயில் ஆகியவை அடங்கும். குடும்பம் மற்றும் நண்பர்களோடு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கவரப்படுவது இங்குள்ள கடற்கரைகளாலே. இதில் சங்குத்துறை, தேங்காப்பட்டினம் மற்றும் சொத்தவிளை கடற்கரைகள் மிகவும் பிரபலம்.

cotaro70s

அருகே சுற்றிப் பார்க்கவேண்டிய இடங்கள்

அருகே சுற்றிப் பார்க்கவேண்டிய இடங்கள்

இது மட்டுமின்றி அருகில் திருச்செந்தூர், கோவளம், சபரிமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகாசி, திருவட்டாறு, திருவனந்தபுரம், சுசீந்திரம், குற்றாலம், திருவல்லா, அம்பாசமுத்திரம், கொல்லம், வர்கலா உள்ளிட்ட தலங்களும் இருக்கின்றன. ஆனால் நமது திட்டத்தில் இந்த இடங்களுக்கு போவது அவ்வளவு சரியாக இருக்காது,. நேர மேலாண்மையை கருத்தில் கொண்டு அருகாமை இடங்களை மட்டும் சுற்றிப்பார்க்கவேண்டும்.

Mari Ganesh

சூரிய மறைவு காணும் இடம்

சூரிய மறைவு காணும் இடம்

மாலை 5.30 மணிக்கெல்லாம் சூரிய மறைவு காணும் இடத்தை சென்றடைந்துவிடவேண்டும். இங்கு சூரிய மறைவு காண்பதில் ஒரு சிறப்பு என்னவென்றால் அங்கேயே சந்திர உதயத்தையும் காண முடியும்.

சூரிய மறைவு காணும் இடத்துக்கு எப்படி செல்வது

அங்கேயே ஆட்டோக்கள் நிறைய கிடைக்கும். அல்லது நடந்து செல்வதாக இருந்தால் கடற்கரை ஓரமாக நடந்து செல்லுங்கள். அதற்கு ஒரு மணி நேரம் முன்பாக கிட்டத்தட்ட 5 மணிக்கெல்லாம் நடக்க ஆரம்பித்துவிடவேண்டும்.

காந்தி மண்டபம் அனைவருக்கும் தெரிந்த இடம் என்பதால் அங்கிருந்து சூரிய மறைவு காணும் இடத்துக்கு எப்படி செல்வது என்பதை காணலாம்.

காந்தி மண்டபத்திலிருந்து கன்னியாகுமரிக்கு பேருந்தில் வந்த வழியில் திரும்ப ரவுண்டானா வரை நடக்கவேண்டும், அங்கிருந்து ஆட்டோக்கள் கிடைக்கும். ஒருவேளை நடந்து செல்ல முடிவெடுத்துவிட்டால், அரை மணி நேர மெல்ல நடை போட்டு இந்த இடத்தை அடையலாம்.

காந்திமண்டபத்தின் எதிர்புறம் டிரையாங்கிள் பார்க் என்பது வரும். அதை நோக்கியவாறு நின்றால், இடது புறமாக செல்லும் கடற்கரை சாலையில் நடையை ஆரம்பிக்கவேண்டும். எங்கேயுமே திரும்பாமல் கடற்கரை வழியாகவே நடந்து சென்றுகொண்டிருந்தால் முடிவில் சூரிய மறைவு காணும் இடத்தை அடையலாம்.

எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு, இரவு உணவை முடித்துக்கொண்டு, இரவு அங்கு அறை எடுத்து தங்கலாம். வெள்ளிக்கிழமை இரவு நல்லதாக அமையட்டும்.

Mehul Antani

சூரிய உதயம் காணும் இடம்

சூரிய உதயம் காணும் இடம்

சனிக்கிழமை நல்ல விடியலாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அதிகாலையிலேயே எழுந்து குளிக்க முயலுங்கள். ஏனென்றால், காலை 5.30 மணிக்கெல்லாம் சூரிய உதயம் காணும் இடத்தை சென்றடைந்துவிடவேண்டும். இங்கு சூரிய உதயம் காண்பதில் ஒரு சிறப்பு என்னவென்றால் அங்கேயே சந்திரன் மறைவையும் சில சமயங்களில் காண முடியும்.

சூரிய உதயம் காணும் இடத்துக்கு எப்படி செல்வது

அங்கேயே ஆட்டோக்கள் நிறைய கிடைக்கும். அல்லது நடந்து செல்வதாக இருந்தால் கடற்கரை ஓரமாக நடந்து செல்லுங்கள். அதற்கு ஒரு மணி நேரம் முன்பாக கிட்டத்தட்ட 5 மணிக்கெல்லாம் நடக்க ஆரம்பித்துவிடவேண்டும்.

காந்தி மண்டபம் அனைவருக்கும் தெரிந்த இடம் என்பதால் அங்கிருந்து சூரிய உதயம் காணும் இடத்துக்கு எப்படி செல்வது என்பதை காணலாம்.

காந்தி மண்டபத்திலிருந்து கன்னியாகுமரிக்கு பேருந்தில் வந்த வழியில் திரும்ப ரவுண்டானா வரை நடக்கவேண்டும், அங்கிருந்து ஆட்டோக்கள் கிடைக்கும். ஒருவேளை நடந்து செல்ல முடிவெடுத்துவிட்டால், அரை மணி நேர மெல்ல நடை போட்டு இந்த இடத்தை அடையலாம்.

காந்திமண்டபத்தின் எதிர்புறம் டிரையாங்கிள் பார்க் என்பது வரும். அதை நோக்கியவாறு நின்றால், வலது புறமாக செல்லும் கடற்கரை சாலையில் நடையை ஆரம்பிக்கவேண்டும். அங்குள்ள ரவுண்டானாவில் வலது புறமாக செல்ல அங்கு விவேகானந்தர் நூலகமும், பேச்சியம்மன் கோயிலும் உங்களை வரவேற்கும். அங்கிருந்து புனித ஆரோக்கியநாதர் ஆலயம் வரை நடந்து சென்றால் அதுதான் சூரிய உதயம் காணவேண்டிய தலம்.

வரும்வழியில் இருக்கும் இடங்களை பார்த்துவிட்டு, கன்னியாகுமரியை விட்டு விடைபெற மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள்.

Balaji

கன்னியாகுமரி ரயில் நிலையம்

கன்னியாகுமரி ரயில் நிலையம்

வெளியில் காலை உணவை எடுத்துக்கொண்டாலும் சரி, ரயில் நிலையத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டு, கிளம்பினாலும் சரி, அறையை காலி செய்துவிட்டு ரயில் நிலையம் நோக்கி புறப்படுங்கள்.

கன்னியாகுமரியிலிருந்து மதுரைக்கு நிறைய ரயில்கள் இருக்கின்றன.

குமரி - மதுரை ரயில்கள் குறித்த தகவல்கள்

காலை 7.50 மணிக்கு ஹவுரா விரைவு வண்டி மதுரை வழியாக செல்லும். அதன்பிறகு மதியம் 1 மணிக்குதான் ரயில். எனவே முன்கூட்டிய திட்டமிட்டு ரயில் பயணச்சீட்டை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

மதியம் 12.45 மணிக்கெல்லாம் மதுரையில் இறங்கி, சுவையான உணவை ருசிக்கலாம். அங்கு சுற்றியிருக்கும் நிறைய சுற்றுலாத் தளங்களையும் காணலாம்.

மறந்துவிடாதீர்கள். சனிக்கிழமை தற்போது மதியம் 1 மணி.

samarkumarsarkar

மதுரையில் காணவேண்டிய இடங்கள்

மதுரையில் காணவேண்டிய இடங்கள்

மதுரை மாநகரில் பல்வேறு மதங்களை சார்ந்தோரும் ஒற்றுமையுடன் வசிக்கின்றனர். பல்வேறு இனத்தாரின் பாரம்பரிய அம்சங்கள் இந்நகரில் கலந்து வேரூன்றி கிடக்கின்றன. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கோரிப்பாளையம் தர்க்கா மற்றும் செயின் மேரி கதீட்ரல் தேவாலயம் போன்றவை இங்குள்ள முக்கியமான ஆன்மீக அம்சங்களாகும். காந்தி மியூசியம், கூடல் அழகர் கோயில், காஜிமார் பெரிய மசூதி, திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, அழகர் கோயில், வைகை அணை மற்றும் அதிசயம் தீம் பார்க் போன்றவை மதுரை பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.

Esme_Vos

மதுரை - ராமேஸ்வரம் ரயில் திட்டம்

மதுரை - ராமேஸ்வரம் ரயில் திட்டம்

மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்ல நிறைய ரயில்கள் இருந்தாலும், மாலை 6.10 க்கு செல்லும் மதுரை ராமேஸ்வரம் பயணிகள் வண்டி இரவு 11 மணிக்கு முன்பாக ராமேஸ்வரம் சென்றடையும். இரவு உணவை வழியில் முடித்துக்கொண்டு, ராமேஸ்வரத்தில் இரவை கழியுங்கள்.

பின் ராமேஸ்வரத்தில் காணவேண்டிய இடங்களை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் காணலாம்.

ராமேஸ்வரத்தில் காணவேண்டிய இடங்கள்

மோட்சத்தை அடைவதற்கு முதன்மையான வழியாக கருதப்படுவது பாவங்களை களைவது தான், அதற்கு இங்கிருக்கும் புனித தீர்த்தங்களில் நீராடுவதைத் தவிர வேறு வழிகளும் இல்லை. உண்மையில், இந்த 24 தீர்த்தங்களிலும் நீராடுவது மூலம் நமது பாவங்களை நேரடியாக நாமே தீர்த்துக் கொள்ளும் வழிமுறையாகும். இராமேஸ்வரத்தில் இந்துக்களுக்கான மதமுக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. இவற்றில் ஸ்ரீ ராமநாதசுவாமி கோவில், 24 கோவில் தீர்த்தங்கள், கோதண்டராமர் கோவில், ஆதாம் பாலம் அல்லது ராம் சேது மற்றும் நம்பு நாயகி அம்மன் கோவில் ஆகியவை அவற்றில் சிலவாகும்.

Belur Ashok

 ராமேஸ்வரத்திலிருந்து உங்க ஊருக்கு திரும்ப

ராமேஸ்வரத்திலிருந்து உங்க ஊருக்கு திரும்ப

ராமேஸ்வரத்திலிருந்து மாலை 5 மணிக்கு, சென்னைக்கு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூருக்கு செல்லும் இந்த ரயில் காலை 7 மணிக்கு முன்பாக சென்றடையும். இந்த ரயில் ராமேஸ்வரத்திலிருந்து ஆரம்பித்து, பாம்பன், மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூரை அடையும்.

BOMBMAN

Read more about: madurai rameshwaram kanyakumari
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X