Search
  • Follow NativePlanet
Share
» »பேக்கள் - கேரளக் கடற்கரையின் அற்புதம்

பேக்கள் - கேரளக் கடற்கரையின் அற்புதம்

பேக்கள், கேரளா மாநிலத்தில் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் அழகும் அமைதியும் நிறைந்த எளியதொரு சுற்றுலாத்தலம். பழமை வாய்ந்த கோட்டைகள், நீலக்கடல் அலைமோதும் அழகு கடற்கரை, வானுயர்ந்த மலைகள், வளம் வழங்கி பாய்ந்தோடும் ஆறு, கலாச்சார தொன்மை கொண்ட கோயில்கள் என பன்முக சுற்றுலாத் தலமாக பேக்கள் திகழ்கிறது. வாருங்கள் இங்கே சிறிய சுற்றுலா சென்று வரலாம்.

பேக்கள் கோட்டை:

பேக்கள் - கேரளக் கடற்கரையின் அற்புதம்

Photo: Riju K

கேரளாவின் மிகப்பெரிய கோட்டை என்ற சிறப்புக்குரியது இந்த பேக்கள் கோட்டை. கடற்கரையை பார்த்தபடியே அமைந்திருக்கும் இக்கோட்டை முக்கிய சினிமா ஷுட்டிங் தளமாகவும் விளங்குகிறது. 'ரோஜா' படத்தில் வரும் 'உயிரே, உயிரே' பாடல் இங்குதான் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. இக்கோட்டையின் மதில் சுவர் மேல் நின்று பார்க்கையில் ஒருபக்கம் அரேபியக்கடல், ஒருபக்கம் அழகான கடற்க்கரை, மற்றொரு பக்கம் செழிப்பான தென்னந் தோப்புகள் என அற்புதமான காட்சிகளை நாம் காணலாம். இயற்கையை ரசிக்க நினைப்பவர்களும், வரலாற்று தொன்மைவாய்ந்த இடங்களை ஆய்வு செய்வதில் ஆர்வமுள்ளவர்களும் நிச்சயம் இங்கு வர வேண்டும்.

கப்பில் பீச்:

பேக்கள் - கேரளக் கடற்கரையின் அற்புதம்

Photo: Ikroos

கேரளத்தில் மிக வேகமாக பிரபலமாகி வரும் கடற்கரைகளுள் கப்பில் பீச்சும் ஒன்றாகும். பேக்கள் கோட்டையை ஒட்டியே அமைந்திருக்கும் இந்த கடற்க்கரை வெகு சுத்தமாகவும், பசுமை சூழ்ந்ததாகவும் இருக்கிறது. வெறுமனே கடக்கரையை ரசிப்பதோடு மட்டும் இல்லாமல் இதனை ஒட்டியே இருக்கும் கொதி மலைக்குன்றின் மீது ஏறி அரபிக்கடலின் பேரழகை ரசிக்கலாம்.

நீலேஷ்வரம்:

பேக்கள் - கேரளக் கடற்கரையின் அற்புதம்

Photo: Prasad Pai

பேக்களில் இருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது நீலேஷ்வரம் என்னும் ஊர். நீலகண்ட ஈஸ்வரர் என்ற சிவன் கோயில் இங்கு இருப்பதால் இவ்விடம் நீலேஷ்வரம் என பெயர் பெற்றிருக்கிறது . நீலேஷ்வர ராஜாக்களின் ஆளுகைக்குள் இருந்த இந்த ஊரில் நிறைய யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் உள்ளன. உடலும் மனதும் புத்துணர்ச்சி பெற ஒருமுறையேனும் இங்கு நிச்சயம் சென்று வரலாம்.

அனந்தபுரம் கோயில்:

பேக்கள் - கேரளக் கடற்கரையின் அற்புதம்

Photo: Vinayaraj

கோயில்களுக்கு பெயர் போன கேரளா மாநிலத்தில் உள்ள ஒரே எரிக்கோயில் இது தான். 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படும் இக்கோயிலை சுற்றி இருக்கும் ஏரியில் இன்றும் முதலைகள் இருக்கின்றன. இந்த முதலைகள் தான் சுவாமிக்கு பாதுகாப்பாக இருக்கின்றனவாம். ஜாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் இக்கோயிலினுள் சென்று வழிபாடு செய்யலாம் என்பது இவ்விடத்தின் முன்னுனாதரமான சிறப்பாகும்.

பேக்களை எப்படி அடைவது?

பேக்களில் இருக்கும் ஹோட்டல்கள்.

Read more about: bekal kerala beaches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X