Search
  • Follow NativePlanet
Share
» »சண்டிகரிலிருந்து மணலி செல்லும் வழியில் அப்படி என்ன அழகான இடங்கள் இருக்கிறது? வாங்க தெரிஞ்சுக்கலாம்?

சண்டிகரிலிருந்து மணலி செல்லும் வழியில் அப்படி என்ன அழகான இடங்கள் இருக்கிறது? வாங்க தெரிஞ்சுக்கலாம்?

சண்டிகரிலிருந்து மணலி செல்லும் வழியில் அப்படி என்ன அழகான இடங்கள் இருக்கிறது? வாங்க தெரிஞ்சுக்கலாம்?

By Balakarthik Balasubramanian

சண்டிகரிலிருந்துப் புறப்படும் நாம், சாலையில் விரைந்துச் செல்ல, நம் வேகத்துக்கு அணைக் கட்டும் விதமாக வியப்பில் ஆழ்த்தும் பல இடங்கள் முன் நம் வண்டியினை நிறுத்திப் பொருமையாக மணலிக்குச் செல்கிறோம். அப்படி என்ன தான் நம்மால் போகும் வழியில் பார்க்க முடிகிறது! வாங்கக் கீழ்க்காணும் பத்தியின் வாயிலாக நாம் பார்க்கலாம். இந்த மணலிப் பகுதிப் பார்ப்பதற்குக் கண்ணுக்கு இனிமையானக் காட்சிகளைப் படைத்து பல இடங்களை இயற்கையைக் கொண்டு அரவணைக்கிறது.

அட எல்லா நாளும் மழை பெய்யுற ஊராம்ல இதுஅட எல்லா நாளும் மழை பெய்யுற ஊராம்ல இது

இமாசலப் பிரதேசத்தில் உள்ள இந்த மணலியில் இயற்கையைப் பிரதிபலிக்கும் அழகிய உயரமான மலைக்குன்றுகளும், பசுமையானப் பள்ளத்தாக்குகளும் நிறையவேக் காணப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 6726 அடி உயரத்தில் காணப்படும் இந்தப் பகுதி குள்ளுப் பள்ளத்தாக்கின் அருகாமையில் அமைந்து நம் மனதினை இனிமைக் கொண்டுக் குளிரூட்டுகிறது. நகரத்தின் வழியே ஓடும் பியாஸ் நதிப் பரந்த வெளிக் காட்சிகளை நம் கண்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கிறது.

சாகச விளையாட்டுக்களின் சங்கமமாக விளங்கும் இந்த மணலியில், நாம் நடைப்பயணம் செல்வது, மலை ஏறுவது, பாராகிளைடிங்க் விளையாட்டு, ராப்டிங்க் எனப்படும் படகுச் சவாரி, பனிச் சறுக்கு விளையாட்டு, ஷோர்பிங்க் எனப்படும் விளையாட்டு எனப் பல நம் கண் முன் வந்துப் பொழுதுப்போக்கிற்கான ஒரு இடம் நான் எனத் தெரியப்படுத்திச் செல்கிறது. மணலிக்கு மிக அருகில் காணப்படும் ஒரு நகரம் சண்டிகர் ஆகும். இந்த நகரம் மிக அருகாமையில் உள்ளதால் பலரும் தன் பயணத்தின் ஒருப் பிறப்பிடமாகச் (ஆதிப்புள்ளியாக) சண்டிகரினைப் பார்க்கின்றனர்.

இந்தப் பகுதி அழகிய சுற்றுச் சூழலையும், மனதுக்கு அமைதியான எண்ணங்களையும் தர, திருமணம் முடிந்து துணைவியாருடன் தேனிலவுக்கு வருவோர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இங்குக் காணப்படுகிறது. மேலும் இந்த மணலி, ஸ்பித்திப் பள்ளத்தாக்கிற்கும் லேஹ்விற்கும் நுழைவாயிலாகவும் அமைந்துள்ளது. இந்த மணலி, மக்களின் மனதில் ஓய்விற்கான ஜமுக்காளத்தினை விரித்து வரவேற்க, நாம் இயற்கை அன்னையின் மடியில் படுத்துப் புத்துணர்ச்சி அடைந்து நிம்மதியாக உறங்கவும் அது வழிவகைச் செய்கிறது.

நாம் பயணத்துக்குத் தயாராகும் இடம்:
சண்டிகர்
செல்லப்போவது: மணலி

இந்தப் பயணத்திற்கு ஏதுவானக் கால நிலைகள் தான் யாவை? வாங்கப் பார்க்கலாம்!

பனிப்பொழிவு

பனிப்பொழிவு

ஆண்டு முழுவதுமே அழகாகக் காட்சியளிக்கும் இந்த மணலிக்கு, கோடைக்காலத்தின் மார்ச் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் வானிலை மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் குளிர்காலத்தின் போது இங்குக் காணப்படும் பூஜ்ஜிய வெப்ப நிலையின் காரணமாக, பனிப்பொழிவின் அழகினை அனுபவிக்க ஒருச் சிறந்த நேரமாக இது அமைகிறது. பருவமழைக் காலமான ஜூலையிலிருந்து ஆகஸ்ட் வரையில் மழையின் தாக்கம் அதிகம் இருப்பதனால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு நம் பயணத்திற்கு இடையூறுத் தர, இந்தக் கால நிலையில் பயணத்தினை நாம் தவிர்ப்பது மிக நல்லதாகும்.

paVan

ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி:

ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி:

குள்ளுவில் உள்ளப் பூந்தார் விமான நிலையம் தான் மணலியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒரு விமான நிலையமாகும். இங்குத் தில்லி மற்றும் சண்டிகரிலிருந்துப் புறப்பட்டு செல்லக் கூடியப் பல உள் நாட்டு விமானங்கள் பூந்தாரை நோக்கி வந்த வண்ணமாகவும் போன வண்ணமாகவும் இருந்துக் கொண்டிருக்கிறது. நாம் இங்கிருந்து மணலிக்கு முன்பதிவுக் கட்டணத்தினைக் காருக்குச் (டாக்ஷிக்கு) செலுத்துவதன் மூலம் நம்மால் செல்லமுடிகிறது. ஆம், மோசமான வானிலை மாறுதல்கள் காரணமாகப் பூந்தரிலிருந்து மணலிக்கு விமானங்கள் ஏதும் இயக்கப்பட வில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கது.

 தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி:

தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி:

மணலியிலிருந்து 350 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளச் சண்டிகர் இரயில் நிலையமும், 360 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்பாளா இரயில் நிலையமும் தான் அருகில் காணக்கூடிய இரு இரயில் நிலையங்களாகும். இங்கிருந்து டாக்சியின் மூலமாகவோ தனியார் பேருந்தின் மூலமாகவோ நம்மால் மணலியினை அடைய முடிகிறது.

சாலை மார்க்கமாக அடைவது எப்படி:

சாலை மார்க்கமாக அடைவது எப்படி:

என்னைப் பொருத்தவரையில் மணலியினை அடையச் சரியானதொரு வழியாக சாலைப் போக்குவரத்தினைக் கூறுவேன். ஆம், சண்டிகரிலிருந்து மணலிக்குத் தோராயமாகச் சுமார் 325 கிலோமீட்டர்கள் தான் ஆகிறது.

வழி 1:

வழி 1:


சண்டிகர் - ரூப்நகர் - பர்மானா - மாண்டி - குள்ளு - மணலி

நெடுஞ்சாலை வழி:
தேசிய நெடுஞ்சாலை 205 இன் வழியாக மற்றும் தேசிய நெடுஞ்சாலை 3 இன் வழியாகச் செல்லலாம்.
தூரம்: 309 கிலோமீட்டர்கள்
பயணத்துக்கானக் கால அவகாசம்:
மணலியினை அடைய 7 மணி நேரம் 30 நிமிடம் ஆகிறது.

paVan

வழி 2:

வழி 2:


சண்டிகர் - மங்கல் - பர்சர் - மாண்டி - பூந்தார் - மணலி
நெடுஞ்சாலை வழி:
தேசிய நெடுஞ்சாலை 3 இன் வழியாக
தூரம்: 370 கிலோமீட்டர்கள்
பயணத்துக்கானக் கால அவகாசம்:
மணலியினை அடைய 8 மணி நேரம் 45 நிமிடம் ஆகிறது.

வழி 3:

வழி 3:


சண்டிகர் - பஞ்ச்குலா - பட்டல் - மாண்டி - குள்ளு - மணலி
நெடுஞ்சாலை வழி:
தேசிய நெடுஞ்சாலை 154 இன் வழியாக மற்றும் தேசிய நெடுஞ்சாலை 3 இன் வழியாகச் செல்லலாம்.
தூரம்: 306 கிலோமீட்டர்கள்
பயணத்துக்கானக் கால அவகாசம்:
மணலியினை அடைய 9 மணி நேரம் ஆகிறது.

ரூப்நகர்

ரூப்நகர்

இந்த 3 வழிகளில் முதல் மற்றும் மூன்றாம் வழிகள் குறுகிய ஒன்று. ஆனாலும், நாம் இந்த மூன்றாம் வழியினைத் தேர்வு செய்வதால் ஒன்றரை மணி நேரம் மணலியினை அடைய நமக்கு அதிகம் தேவைப்படுகிறது. ஒருவேளை நாம் தேர்ந்தெடுப்பது முதல் வழியாக இருக்குமாயின், இந்த வழியில் உங்கள் கண்களைக் குளிரூட்டக் கூடியப் பல இடங்களையும், மனதினை இதமாக்கக் கூடிய பல இயற்கையின் அதிசயங்களையும் நீங்கள் பார்ப்பீர்கள் என்பது உசிதமானதொரு எண்ணமே!
சண்டிகரிலிருந்து அதிகாலையில் நாம் சீக்கிரம் கிளம்புவதன் மூலமாக நம்மால் கூட்ட நெரிசலைத் தவிர்க்க முடிகிறது. இந்தப் பகுதியில் பலக் குருத்துவாராக்களின் வருகையினை நம்மால் காண முடிகிறது. ரூப்நகர் மாவட்டத்தில் உள்ளப் பக்ரா அணை மிகவும் பிரசித்திப்பெற்ற ஒன்றாகும். இந்த அணையினை வெளிநாட்டினர் பார்ப்பதற்கு பலப் பாதுகாப்புச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருப்பதுடன் அவர்களுக்கென்றும் வரையரைகளும் (கட்டுப்பாடுகளும்) இங்கு நிறையவே உள்ளது.

 தனித்தன்மை

தனித்தன்மை

இந்தியாவில் உள்ள ஒரு தனித்தன்மை மிக்க அருங்காட்சியகங்களுள் ஒன்றான விராசாத் மின் கல்சா அருங்காட்சியகம், சீக்கியர்களின் வரலாற்றினையும் அவர்களுடைய மதத்தினையும் நிலை நாட்டிச் சிறப்புமிக்க ஒன்றாக விளங்குகிறது. இமயமலையின் உயரத்தில் காணப்படும் மிக அழகியக் குருத்துவாராக்களுள் ஒன்றான அனந்தபூர் சாஹிப், மலைகளாலும், சுட்லெஜ் நதியாளும் சூழ்ந்து எல்லைப் பகுதியாகக் காட்சியளிக்கிறது. அனந்தபூர் சாஹிப், ஹொல்லா மொல்லாவின் பிரசித்திப் பெற்ற ஒரு சீக்கிய திருவிழாவாகும். மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் இந்தத் திருவிழா அங்குள்ளவர்களால் மூன்று நாட்களுக்குக் கடைப்பிடிக்கப்படுகிறது.

RyGuyWy

ரீவல்சர் ஏரி

ரீவல்சர் ஏரி

அடுத்ததாக நாம் பார்க்கப் போவது, மாண்டி மாவட்டத்தில் உள்ள, ரீவல்சர் ஏரியாகும். திசோ பேமாத் தாமரை ஏரி என அழைக்கப்படும் இந்த ஏரி மிகவும் பிரசித்திப் பெற்ற ஒன்றாகும். இந்த ஏரி, ஹிந்து மற்றும் புத்த மதங்களுக்குத் தொடர்புடையது என்றும் புராணங்களால் கூறப்படுகிறது. மேலும் இங்குள்ள ஆலயங்கள், சிவப் பெருமானுக்கும், கிருஷ்னனுக்கும், லோமஸ் என்னும் முனிவருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாகவும் திகழ்கிறது. மேலும் இங்கே 3 புத்த மடங்களும் அமைந்து நம் மனதினை அமைதிக் கொண்டு ஆள்கிறது. அதுமட்டுமல்லாமல் மஹாபாரதத்தின் மெழுகு அரண்மனை எரியும் காட்சிகளைக் கொண்ட அத்தியாயத்தின் மூலமாக இந்த இடம் உருவானதொரு வரலாறும் நமக்குப் புராணத்தின் வாயிலாகத் தெரிய வருகிறது.

பரசர் ஏரி

பரசர் ஏரி


இந்த இடத்தில் அமைந்துள்ள மற்றுமொரு ஏரியான பரசர் ஏரி மிகவும் பிரசித்திப்பெற்ற ஒன்றாகும். இந்த ஏரியில் முனிவர் பரசர் தியானம் செய்தமையால் புனிதத்தன்மை நீங்கா ஒரு ஏரியாகவும் இதனைப் போற்றப்படுகிறது. மேலும் இங்குள்ள ஆலயம் அந்த முனிவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று எனவும் நம்பப்படுகிறது. ஒருக் குழந்தை ஒற்றை மரத்தினை நட்டதின் விளைவாக இந்தக் கோயில் கட்டப்பட்டதாகவும் பேசப்படுகிறது. இந்த நீள் வட்ட வடிவம் கொண்ட ஏரியின் நடுவே ஒரு மிதக்கும் தீவு இருப்பதாகவும் அதுப் பார்ப்பதற்கு அழகாகவும் காட்சியளிக்கிறது என இந்தப் பகுதியின் பெருமையினைப் பற்றி பேசாதவர்கள் எவரும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

 பசுமை நிறைந்த வளங்கள்

பசுமை நிறைந்த வளங்கள்

அதேபோல் இங்குக் காணப்படும் இந்தப் பண்டோ அணைப் பீயஸ் நதியில் அமைந்திருக்கும் ஒரு நதியாகும். இந்த அணை, நீர் வளங்களாலும், பச்சைப் பசுமை நிறைந்த வளங்களாலும் சூழ்ந்து நம்மை ஆர்ப்பரிக்க வைக்கிறது. மேலும் இந்த அணை, பார்ப்பதற்கு உகந்த சிறந்த இடங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது. மாண்டியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷிக்கரித் தேவி ஆலயம் மிகவும் பிரசித்திப்பெற்ற ஒன்றாகும். கடல் மட்டத்திலிருந்துச் சுமார் 3332 மீட்டர்கள் நாம் மேல் நோக்கி ஏற, அம்பிகையின் அருள் நமக்குக் கிடைக்கிறது. இறைவனின் திருவருளால் மெய் மறந்து நாம் செல்ல, கனவில் கூட நம்மால் அமைதியான அழகானக் காட்சிகளைக் காண முடிகிறது. அதுமட்டுமல்லாமல், இங்குப் பயணிக்கும் நாம், கதிரவனின் கதிர்தன்மையினை சுருக்கிக் கொள்ளும் அந்த மாலை நேரக் காட்சியினைக் கண்டு மேலும் மகிழ்ச்சியடையலாம். ஆம், சூரிய அஸ்தமனம் இங்குப் பார்க்க வேண்டிய சிறப்பம்சங்களுள் ஒன்றாக விளங்கி, இதுவரை நாம் கண்டிராத ஒருக் காட்சியினை கண்கள் முன்பு அந்த மாலை நேர மயக்கத்தில் சமர்ப்பிக்கிறது.

சிறுத் துளிப் பெரு வெள்ளம்

சிறுத் துளிப் பெரு வெள்ளம்

சிறுத் துளிப் பெரு வெள்ளம் என்பதற்கேற்ப, சின்னஞ் சிறியக் கிராமத்தின் உள்ளே தான் பல சுவாரஷ்யமான அழகியக் காட்சிகள் ஒளிந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு சிறியக் கிராமம் தான் இந்தக் காசோலாகும். இந்தக் கிராமத்தில் தள்ளிக்காணப்படும் கடைத் தெருக்களும், செழிப்பானப் பசுமையான சூழலும் நம் கண்களை வெகுவாகக் கவர்கிறது. இந்தப் பகுதிப் பார்வதிப் பள்ளத்தாக்கில் அமைந்துக் காணப்படுகிறது. மேலும் இந்தப் பள்ளத்தாக்கில் வண்ணம் தீட்டப்பட்ட மலர்களும், பசுமைத் தன்மை நீங்காத் தாவரங்களும் நம்மைக் குஷிப்படுத்துகிறது. கசோலில் இருந்து 15 நிமிடங்கள் பயணத்தின் மூலமாக நம்மால் மணிகரன் குருத்வாராவினை அடையமுடிகிறது. அது இந்துக்களுக்காகவும் சீக்கியர்களுக்காகவும் அமைக்கப்பட்ட ஒரு யாத்திரை மையமாகவும் அமைந்து நம் மனதினை அமைதிக் கொண்டு ஆள்கிறது.

Public.Resource.Org

பின்னனி

பின்னனி

அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தின் அமைப்பு மிகவும் சிக்கலாகக் காணப்பட, அதனை உருவாக்கிய ஒருவரினைப் பற்றியப் பிரமிப்பு தான் மனதினுள் எழுகிறது என்றுக் கூறலாம். மலைகளின் பின்னனியில் காணும் கவர்ச்சியழகும் ஊற்றுகளில் இருந்து வெளிப்படும் இயற்கைத் தன்மை நீங்கா கடும் நீரும், நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, ஆழத்தினைக் கணக்கிட மனம் ஆசைக்கொள்கிறது. மேலும் இந்தப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு அதிகளவிலேக் காணப்படக் கூட்டம் கூட்டமாக வந்துக் கொண்டும் போய் கொண்டும் இருக்கிறார்கள். இங்கு வரும் சிலப் பக்தர்கள், பருத்திப் பைகளில் அரிசியினைப் போட்டு சூடு செய்து சில நிமிடங்களில் சமையலையும் தயார் செய்கிறார்கள். குருத்வாராவில் கிடைக்கும் லங்கர் எனப்படும் உணவினை நம்மால் ஒருபோதும் தவிர்க்க இயலாது. நாம் எளிதில் உணவினை சமைத்து அதனை நம் அருகில் உள்ளவர்களுக்கும் நட்புரிமையுடன் கொடுத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் ஒரு சூழலும் இங்கு ஏற்பட, நம் மனம் நெகிழ்ச்சி அடைகிறது. குள்ளுவினை அடையும் நாம், சாகசத்தினைப் புரிந்துக் கொண்டும், பயணங்கள் பல மேற்கொண்டும் நம் பிரயாணத்தின் சிறப்பினை மேலும் உணரலாம்.

ரோட்டங்க் வழி:

ரோட்டங்க் வழி:


நாம் மணலிச் செல்லும் வழியில் காணும் இந்த இடம், நம் பயணப் பட்டியலில் இருந்து நீக்கக் கூடாத ஒன்றாகும். ஆனால், இந்த ரோட்டங்க் வழி, ஜனவரி முதல் ஏப்ரல் வரை சிலக் காரணங்களால் மூடப்பட, அந்தக் காலத்தில் நாம் பயணத்தினை இந்த வழிகளில் திட்டமிடாமல் தவிர்ப்பது நல்லதாகும். 3979 மீட்டர் உயரத்தில் காணப்படும் இந்த ரோட்டங்க் வழிகளில் பலச் சுவாரஷ்யமான நெகிழ்ச்சியடையக் கூடிய சாகசங்களான, மலையின் மீது ஓட்டும் பைக் ரேஸ், பனிச்சறுக்கு என பல விளையாட்டுக்கள் நம் மனதினை உற்சாகத்தினை நோக்கி அழைத்துச் செல்கிறது.

Prasanthpj

மால் சாலை:

மால் சாலை:


இந்த இடம், நாம் வந்துச் சென்றதின் நினைவாகப் பொருள்கள் வாங்குவதற்கு ஏதுவாகவும், ஆபரணங்கள் வாங்குவதற்கு ஏற்றதாகவும் அமைந்து நம்மை ஷாப்பிங்க் நோக்கி அழைக்கிறது. மேலும் இங்குக் கடைகளும் உணவகங்களும் நிறையவேக் காணப்படுகிறது. இவ்வாறுக் கடைகள் நிறைந்த இந்தப் பகுதி எந்நேரமும் சல சலப்புடனேக் கூட்டமாகக் காணப்படுகிறது. அதேபோல் வட நாட்டு ஸ்பெஷலான மொமோ எனப்படும் நொடிப்பொழுதில் தயாராகும் உணவு வகையும், துக்பா எனப்படும் சூப் வகையும் சூடான பாணியில் எந்நேரமும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல், சுத்தப்படுத்த வெண்ணெய் தேயிலைப் பயன்படுத்தபடுவதும் புதுமையானதொரு யுத்தியாகப் பலராலும் இங்குப் பேசப்படுகிறது.
Tanta.dpk

ஹிடிம்பா ஆலயம்:

ஹிடிம்பா ஆலயம்:


இந்த ஆலயம், பஞ்சப் பாண்டவர்களுள் ஒருவரானப் பீமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாகும். மேலும் இங்குள்ள ஒருச் சன்னதி, பீமன், ஷிடிம்பனின் மகனான கடோட்கச்சானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று என்றதொருக் கதையும் உண்டு. அதேபோல், ஹிடிம்பாத் திருவிழா என்னும் ஒன்று, மே மாதத்தில் 3 நாட்கள் கொண்டாடப்படும் ஒன்றாகவும் பிரசித்திப்பெற்று இந்த ஆலயம் சிறப்பாக விளங்குகிறது.
Balaji.B

https://commons.wikimedia.org/w/index.php?search=Rohtang+pass&title=Special:Search&go=Go&uselang=en&searchToken=7jnyynt2nsss0d8o63vwn4ige#%2Fmedia%2FFile%3ARohtang_Pass_1.jpg

வசிஷ்ட் ஆலயமும் வசந்தகாலமும்:

வசிஷ்ட் ஆலயமும் வசந்தகாலமும்:

இந்த ஆலயம், வசிஷ்ட் என்னும் முனிவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று என்றும், வசந்தக் காலத்தின் போது இந்த ஆலயத்தில் உள்ள நீரில் கந்தகத் தன்மைக் கொண்டிருப்பதாகவும் அந்த நீரினை மருத்துவக் குணங்களுக்குப் பயன்படுத்துவதாகவும் கூறுகிறார்கள். மேலும் இங்குக் குளிப்பதற்கு உகந்தத் தொட்டிகளாக ஆலா துருக்கிய ஹம்மம்ஸ் எனப்படும் தொட்டிகளும் ஆண், பெண் என இருப் பாலருக்கும் தனித்தனியேக் காணப்படுகிறது. இந்தப் பகுதியினை நாம் பார்க்கக் காலைப் பொழுது உதவ, அந்த நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் உள் புகும் சிரமம் என்பது இல்லை. ஆதலால், குளிப்பதற்குப் பாதுகாப்பினை நாடும் நபர்கள் காலையில் சென்று இங்குக் குளிப்பது அவர்கள் சிரமத்தினைத் தவிர்த்து இதமானதொரு உணர்வினைத் தருகிறது.

அதேபோல், சோலாங்க் பள்ளத்தாக்கு, பார்வதிப் பள்ளத்தாக்கு, பியஸ் குன்ட் ஆகியவை நாம் கண்டு ரசிக்க வேண்டிய ஒரு இடமாக இந்த மணலிப் பகுதியில் அமைந்திருக்கிறது. மேலும், இங்குக் காணும் பனிகள் மூடிய மலைகளும், பனிப்பாறைகளும் அழகியக் காட்சியினை நம் கண்களுக்குப் பரிசளித்து சாகச விளையாட்டினை விளையாட நம்மிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி மனதினை கொள்ளைக் கொள்கிறது.

Tanweer Morshed

Read more about: travel manali tour chandigar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X