Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் மிக பிரபலமான மூன்று மனிதர்கள் பிறந்த ஊர்கள்

இந்தியாவின் மிக பிரபலமான மூன்று மனிதர்கள் பிறந்த ஊர்கள்

By Nagaraju

உலக அளவில் தங்களின் திறமை மூலம் இந்திய நாட்டுக்கு பெருமை தேடித்தந்த, சர்வதேச அளவில் இந்தியாவின் முகங்களாக திகழும் பிரபலங்கள் பிறந்த நகரங்கள் எவைஎவை என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள். மிகவும் பின்தங்கிய, வளர்ச்சியடையாத மாநிலத்தில் இருந்து வந்து, தன் திறமையால் சாதித்து சர்வதேச அளவில் தங்கள் ஊர்களை பற்றிய அடையாளங்களை மாற்றி எழுதிய சில சுவாரஸ்யமான வரலாற்று தகவல்களையும் இங்கே அறிந்து கொள்வோம்.

கோடை கால சிறப்பு சலுகை : மேக் மை ட்ரிப் இணையதளத்தில் ஹோட்டல் கட்டணங்களில் 35% பெறுவதற்கான கூப்பனை இங்கே பெற்றிடுங்கள்

தோனி - ராஞ்சி

தோனி - ராஞ்சி

இந்தியாவிலேயே வைத்து மிக செழுமையான இயற்கை தாது வளங்கள் கொண்ட மாநிலம் என்றால் அது ஜார்கண்ட் தான். ஆனாலும், வளர்ச்சி விகிதத்தில் மிகவும் பின் தங்கிய மாநிலமாகவும், மாவோயிஸ்ட் பாதிப்புக்கு உள்ளாகிய இடமாகவுமே இது வெளி உலகுக்கு அறிமுகமாகியிருந்தது. இதனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி தற்போது ஜார்கண்ட் பல துறைகளிலும் வளர்ச்சியடைய காரணமாக இருப்பவர் ஜார்க்கண்டின் தலைநகரான ராஞ்சியில் பிறந்து இந்திய கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக திகழும் தோனி தான்.

தோனி - ராஞ்சி

தோனி - ராஞ்சி

இந்த மாநிலம் தொழில் துறை மட்டும் இல்லாது சுற்றுலாத்துறையிலும் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் நாம் சுற்றிபார்க்க வேண்டிய இடங்கள் ஏராளமாக உண்டு. அவற்றை பற்றி அடுத்த பக்கத்தில் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

ராஞ்சி சுற்றுலாத்தலங்கள் :

ராஞ்சி சுற்றுலாத்தலங்கள் :

ராஞ்சியை நாம் 'அருவிகளின் நகரம்' என்று தாரளாமாக அழைக்கலாம். அந்த அளவுக்கு பல அழகான இயற்கை காட்சிகளை கொண்ட அருவிகள் இருக்கின்றன. ஹுன்று அருவி, ஜோன்ஹா அருவி, சீதா அருவி போன்றவை நாம் நிச்சயம் சென்று பார்க்கவேண்டிய இடங்கள் ஆகும். கோடை காலத்தில் சென்று ஆசைதீர குளித்து மகிழலாம்.

Photo:Skmishraindia

ஹூண்டுரு அருவி :

ஹூண்டுரு அருவி :

இயற்கை எழில் கொஞ்சும் ராஞ்சி நகரில் இருக்கும் முக்கியமான சுற்றுலாத்தலம் தான் இந்த ஹூண்டுரு அருவி ஆகும். இந்தியாவில் இருக்கும் உயரமான அருவிகளில் ஒன்றான இது சுபர்ணரேகா ஆற்றின் ஊடாக 322 அடி உயரத்தில் இருந்து வீழ்கிறது. மழை காலத்தில் இவ்வருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்போது சுற்றுலாப்பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதேசமயம் கோடை காலத்தில் மிதமான அளவில், குளுகுளுவென கொட்டும் தண்ணீரில் ஆட்டம் போடுவது அற்புதமாக இருக்கும்.

மேலும் இதனை சுற்றிலும் நாம் புகைப்படம் எடுக்க அற்புதமான காணிடங்கள் நிறைய உள்ளன. ராஞ்சி நகரில் இருந்து 45 கி.மீ தொலைவில் ராஞ்சி - புருலியா சாலையில் இவ்விடம் அமைந்திருக்கிறது.

Photo:smeet Chowdhury

ஜார்கண்ட் சர்வதேச விளையாட்டு வளாகம் :

ஜார்கண்ட் சர்வதேச விளையாட்டு வளாகம் :

மிகவும் பின்தங்கிய ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் இந்திய அணிக்கு கேப்டனாக வருவார் என்பது யாருமே யுகிக்காத ஒன்று. அப்படி தோனி ஒரு நாயகனாக உருவானது ஜார்க்கண்டின் விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவி புரிந்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக உருவானது தான் ஜார்கண்ட் சர்வதேச விளையாட்டு வளாகம். உலகத்தரத்தில் அமைக்கப்பட்ட இந்த மைதானத்தில் இந்தியா மற்றும் தோனி கேப்டனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் பங்கேற்ற போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்தியாவில் நாம் நிச்சயம் சென்று பார்க்க வேண்டிய மைதானங்களில் இதுவும் ஒன்றாகும்.

Photo:Akash Guruji

ரஜினிகாந்த் - பெங்களுரு :

ரஜினிகாந்த் - பெங்களுரு :

ரஜினி காந்த், இவரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று சொல்வதை விடவும் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் வந்து தன் திறமை மற்றும் உழைப்பினால் உயர்ந்த இவரின் வாழ்க்கை சாதிக்க விரும்புகிறவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பாடம்.

ரஜினிகாந்த் - பெங்களுரு :

ரஜினிகாந்த் - பெங்களுரு :

இவர் பிறந்த ஊர் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களுரு ஆகும். இன்றைய இந்தியாவின் இளைஞர்களின் தலைநகரமாக திகழும் பெங்களுருவுக்கு வாழ்கையில் ஒருமுறையாவது கண்டிப்பாக சென்று வர வேண்டும். எங்கெங்கு காணினும் சூழ்ந்திருக்கும் பசுமை, குளிர்ச்சியான சீதோஷணம் போன்றவை நம்மை பெங்களுருவிலேயே இருக்க வைத்து விடும்.

Photo: Flickr

பெங்களுருவில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தலங்கள் :

பெங்களுருவில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தலங்கள் :

லால் பாக் மலர் பூங்கா, கர்னாடக உயர் நீதி மன்றத்தை ஒட்டி அமைந்திருக்கும் கப்பன் பூங்கா, பெங்களுரு கோட்டை, பன்னேருகட்டா தேசிய பூங்கா, இஸ்கான் கோயில் போன்ற இடங்களை பெங்களுருவில் நாம் நிச்சயம் சுற்றிப்பார்க்க வேண்டும்.

Photo:Anoop Kumar

பெங்களுருவில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தலங்கள் :

பெங்களுருவில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தலங்கள் :

பெங்களுருவில் நாம் நிச்சயம் காண வேண்டிய 25 இடங்கள் பற்றி இங்கே அறிந்து கொள்ளுங்கள். பெங்களுருவை பற்றிய மேலதிக தகவல்களை தமிழ் நேடிவ் பிளானட் தளத்தில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo: prashantby

சச்சின் - மும்பை :

சச்சின் - மும்பை :

கிரிக்கெட் என்பது இந்தியாவில் ஒரு மதம் என்றால் சச்சின் தான் அம்மதத்தின் கடவுள். சச்சின் ஒரு மைதானத்தினுள் நுழையும் போதே ரசிகர்களின் கோஷம் விண்ணைப்பிளக்கும். ஒரு நாள் கிரிகெட்டின் ஆகச்சிறந்த வீரராக போற்றப்படும் சச்சின் பிறந்த இடம் மும்பை.

சச்சின் - மும்பை :

சச்சின் - மும்பை :

மிகவும் பரபரப்பான, நெரிசல் மிகுந்த நகரமாக திகழும் மும்பையிலும் நாம் சுற்றிப்பார்க்க விதவிதமான இடங்கள் இருக்கின்றன. முக்கியமாக மும்பை சென்றதும் நாம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் கேட் வே ஆப் இந்தியா ஆகும்.

மாலை நேரத்தில் இங்கு நின்றபடியே அரபிக்கடலில் சூரிய அஸ்தமனத்தை ரசிப்பது அத்தனை ஆனந்தம் தருவதாக இருக்கும்.

Photo:Anil Wadghule

சச்சின் - மும்பை :

சச்சின் - மும்பை :

ஆரவாரமில்லாமல் மும்பையின் அழகை ரசிக்க விரும்புகிறவர்கள் இரவு 10 மணிக்கு மேல் மும்பையின் மிக முக்கிய பகுதியான 'மெரைன் டிரைவ்' சாலையில் கார் பயணம் போக வேண்டும். ஒளி விளக்குகளால் சூழப்பட்டு இரவில் அவ்வளவு அழகாக இந்த இடம் காட்சி தரும்.

photo:Satrajit Basu

சச்சின் - மும்பை :

சச்சின் - மும்பை :

இந்த மும்பை நகரை ஒரே நாளில் எப்படி சுற்றிப்பார்ப்பது என்பதை தமிழின் No.1 பயண இணையதளமான தமிழ் நேடிவ் பிளானட்டில் அறிந்துகொள்ளுங்கள்.

Photo:Himanshu Sarpotdar

சச்சின் - மும்பை :

சச்சின் - மும்பை :

இப்போதெல்லாம் நம்ம ஊர்களில் திரும்பிய பக்கமெல்லாம் பேல் பூரிக்கடைகளையும், பாணி பூரி கடைகளையும் பார்க்க முடிகிறது.மும்பையை இந்த வகை மாலைநேர உணவுகள் எல்லாவற்றுக்கும் பிறப்பிடம் என்றே சொல்லலாம். அதிலும் ஜுஹு கடற்கரையில் மாலைநேரத்தில் காலாற நடந்தபடி இந்த உணவுகளை சுவைப்பது உங்களையும் ஒரு 'மும்பைகர்'ஆக நினைக்க தூண்டும்.

Photo:Rakesh

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X