Search
  • Follow NativePlanet
Share
» »வாங்க பாஸ்...வாழ்கையை கொண்டாடலாம்!!!

வாங்க பாஸ்...வாழ்கையை கொண்டாடலாம்!!!

புதுசா ஏதாவது செய்யனும்னு ரொம்ப நாளா ஆசையா இருக்கா ?. நாளைக்கு உயிரோடு இருப்போமா என்றே நிச்சயமாக தெரியாத பொழுது எதற்காக நம் கனவுகளை நிறைவேற்ற காத்திருக்க வேண்டும். கிடைத்திருக்கும் இந்த ஒரு வாழ்க்கையை திகட்ட திகட்ட கொண்டாட வேண்டாமா?. சரி, எப்படி கொண்டாடலாம்?.அதை இங்கே தெரிஞ்சுக்கங்க.

Goibibo தளத்தில் ஹோட்டல் கட்டணங்களில் ₹6000 தள்ளுபடி பெறுவதற்கான கூப்பனை இங்கே பெற்றிடுங்கள்

ஸ்பீடா வண்டி ஓட்ட ஆசையா?:

ஸ்பீடா வண்டி ஓட்ட ஆசையா?:

கார் ஓட்ட பிடிக்கும் எல்லோருக்குமே இருக்கும் தீரா கனவுகளில் ஒன்று பார்முலா 1 பந்தையங்களில் வருவது போல மிக வேகமாக ரேஸ் டிராக்கில் கார் ஓட்ட வேண்டும் என்பது தான். மைக்கில் ஷூமாக்கர் போல நரேன் கார்த்திகேயன் போல நீங்களும் ரேஸ் டிராக்கில் சீறிப் பாயலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ள அடுத்த பக்கத்துக்கு வாருங்கள்.

Photo:Yasunari Goto

ஸ்பீடா வண்டி ஓட்ட ஆசையா?:

ஸ்பீடா வண்டி ஓட்ட ஆசையா?:

உத்திர பிரதேச மாநிலத்தில் நொய்டா நகரில் கட்டப்பட்டிருக்கும் இந்தியாவின் ஒரே பார்முலா 1 பந்தைய சாலையான புத் சர்வதேச பந்தைய சாலையில் ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட நாட்கள் பொது மக்களுக்காக திறக்கப்படுகிறது.

அந்நாட்களில் உங்களின் காரில் 5.14 கி.மீ சுற்றளவு கொண்ட இந்த பந்தைய சாலையில் எவ்வளவு வேகமாக போக முடியுமோ அவ்வளவு வேகமாக கார் ஒட்டி மகிழலாம்.

Photo:Yasunari Goto

ஸ்பீடா வண்டி ஓட்ட ஆசையா?:

ஸ்பீடா வண்டி ஓட்ட ஆசையா?:

இதற்காக சில ஆயிரங்கள் வரை கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். கார் மட்டும் இல்லாமல் பைக்கிலும் இங்கே ரேசிங்கில் ஈடுபடலாம்.

பந்தைய சாலைக்கு செல்லும் முன்பாக கடுமையான தரக்கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு உங்கள் வாகனம் உட்படுத்தப்படும்.

Photo:Ranjan ~

ஸ்பீடா வண்டி ஓட்ட ஆசையா?:

ஸ்பீடா வண்டி ஓட்ட ஆசையா?:

கார் அல்லது பைக் ரேசிங் கனவில் உள்ளவர்கள் தலைநகர் டெல்லியில் இருந்து 52 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த புத் சர்வதேச பந்தைய சாலைக்கு நிச்சயம் சென்று உங்கள் கனவை வாழ்ந்திடுங்கள்.

Photo:Yasunari Goto

ஸ்பீடா வண்டி ஓட்ட ஆசையா?:

ஸ்பீடா வண்டி ஓட்ட ஆசையா?:

நொய்டா நகரை எப்படி அடைவது? , அங்கிருக்கும் தங்கும் விடுதிகள் பற்றிய விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Nadir Hashmi

ராஜா போல ஒரு சவாரி :

ராஜா போல ஒரு சவாரி :

இந்தியாவின் சுற்றுலா தலைநகரம் என்றழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலத்தில் பழமையான ராஜ பரம்பரைகள் வாழ்ந்த கோட்டைகள் இன்றும் நிறைய இருக்கின்றன. அந்த கோட்டைகளை அந்த காலத்து ராஜாக்கள் போல யானை மீது அமர்ந்து ஒய்யாரமாக சுற்றிப்பார்க்கலாம்.

ராஜாவை போல யானையில் உலா வந்தால் மட்டும் போதுமா?. ராஜாவை போல அரண்மனையில் வாழவும் செய்யலாம். எப்படி?. அடுத்த பக்கத்துக்கு வாருங்கள்.

Photo: Flickr

 லேக் பேலஸ் :

லேக் பேலஸ் :

சுற்றிலும் நீர் சூழ்ந்திருக்க நடுவே அமைந்திருக்கும் அரண்மனை ஒன்றில் உங்கள் காதல் மனைவியுடன் சில நாட்களை செலவிட்டால் எப்படியிருக்கும்?. அப்படியொரு மறக்கமுடியாத காதல் அனுபவத்தை கொண்டாட நீங்கள் வர வேண்டிய இடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் நகருக்கு தான்.

இங்கு தாஜ் ஹோட்டல் குழுமத்தால் தாங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ள லேக் பேலஸ் அரண்மனையில் காதல் ததும்ப கொண்டாடி மகிழுங்கள்.

Photo:Tomasz Wagner

 லேக் பேலஸ் :

லேக் பேலஸ் :

உலகில் இருக்கும் மிகவும் ரோமேண்டிக்கான ஹோட்டல்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த லேக் பேலசை பற்றிய மேலதிக தகவல்களை தமிழின் முதன்மை பயண வழிகாட்டியான தமிழ் நேடிவ் பிளானட்டில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Tomasz Wagner

 லேக் பேலஸ் :

லேக் பேலஸ் :

ராஜஸ்தானை புதுமையாக சுற்றிப்பார்க்க விரும்புகிறவர்கள் 'ஹாட்-ஏர்' பலூன் மூலம் வானில் பறந்தபடியே சுற்றிப்பார்க்கலாம்.

Photo: Flickr

 சொர்க்க தீவுக்கு சென்றிடுங்கள் :

சொர்க்க தீவுக்கு சென்றிடுங்கள் :

உங்களை நெருக்கடியில் தள்ளும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு சில நாட்கள் அந்தமான் தீவுகளில் இருக்கும் 'ஹேவ்லாக்' தீவுக்கு சென்று வாருங்கள்.

இந்த தீவில் கொட்டிக்கிடக்கும் இயற்கையழகு நம்மை நிச்சயம் மெய் மறக்கச்செய்யும். குறிப்பாக இங்குள்ள ராதா நகர் கடற்கரை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

Photo: Flickr

 சொர்க்க தீவுக்கு சென்றிடுங்கள் :

சொர்க்க தீவுக்கு சென்றிடுங்கள் :

ஆசியாவின் சிறந்த கடற்கரையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்த கடற்கரையில் சற்றும் மாசுபடாத வெள்ளை மணலும், நீல நிறக்கடலும், புத்துணர்ச்சி தரும் சுத்தமான காற்றும் உண்மையான மகிழ்ச்சி எதுவென்று நமக்கு உணர்த்தும். இந்த கடற்கரையில் உள்ள ஒரு சிறப்பம்சமாக யானை மீது சவாரி செய்தபடியே கடற்கரையை ரசிக்கலாம்.

Photo: Flickr

 உயரமான இடத்தில் இருந்து குதியுங்கள் :

உயரமான இடத்தில் இருந்து குதியுங்கள் :

'குஷி' படத்தில் 'யார் சொல்வதோ, யார் சொல்வதோ' என்ற பாடல் காட்சியின் துவக்கத்தில் நடிகர் விஜய் உயரமான பாலம் ஒன்றில் இருந்து காலில் கயிறு கட்டிக்கொண்டு நூறு அடி பள்ளத்தில் குதிப்பார். அந்த சாகச விளையாட்டுக்கு பெயர் 'பங்கீ ஜம்பிங்' ஆகும். அந்த விளையாட்டு இப்போது இந்தியாவிலும் பிரபலமாக தொடங்கியிருக்கிறது.

Photo: Flickr

 உயரமான இடத்தில் இருந்து குதியுங்கள் :

உயரமான இடத்தில் இருந்து குதியுங்கள் :

ஆன்மீக ஸ்தலமாக மட்டுமே அறியப்பட்டு வந்த ரிஷிகேஷ் இப்போது சாகச பிரியர்களின் விருப்பத்துக்குரிய இடமாகவும் மாறி வருகிறது. ஏற்கனவே இங்கே ராப்டிங் எனப்படும் சாகச படகு பயணம், ஜிப் லைன் ரைட் எனப்படும் உயரமான இடத்தில் இருந்து கயிற்றின் உதவியுடன் மற்றொரு இடத்துக்கு செல்வது போன்ற சாகச விளையாட்டுகளுடன் இப்போது புதிதாக இந்த 'பங்கீ ஜம்பிங்கும்' சேர்ந்துள்ளது.

Photo: Flickr

 உயரமான இடத்தில் இருந்து குதியுங்கள் :

உயரமான இடத்தில் இருந்து குதியுங்கள் :

உயரமான இடம் என்றாலே பயப்படுபவர்கள் இந்த விளையாட்டை நிச்சயம் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். பார்க்க ஆபத்தானதாக தெரிந்தாலும் எவ்விதத்திலும் விபத்து ஏற்ப்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இதுபோன்ற நல்ல இடங்களுக்கு சென்றும், புதுமையான விஷயங்களில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டும் உங்கள் வாழ்க்கையை கொண்டாடி மகிழுங்கள்.

Photo: Flickr

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X