Search
  • Follow NativePlanet
Share
» »கோகர்ணா என்னும் குட்டி கோவா !!

கோகர்ணா என்னும் குட்டி கோவா !!

By Naveen

"மச்சி இந்த சம்மருக்கு கண்டிப்பா கோவா போறோம், கலக்குறோம்" இப்படி ஒரு வார்த்தையை சொல்லாத ஆளே தமிழ்நாட்டில் இருக்க முடியாது. நம்ம ஊர் இளைஞர்களின் வாழ்நாள் கனவுகளில் ஒன்று ஒருமுறையாவது நண்பர்களுடன் கோவா சென்று ஆசை தீர கொண்டாட வேண்டும் என்பது தான். அது நிறைவேறாமல் போகச்செய்யும் பல காரணங்கள் முக்கியமானது கோவா செல்ல மற்றும் அங்கே ஆகும் செலவுகள் தான். ஒரு சாதாரண உணவகத்திற்கு மூன்று பேர் சென்று மிதமாக உணவு உண்டாலே பில் ஆயிரத்தை தாண்டும்.

இப்போது தேர்வுகள் எல்லாம் முடிந்து கோடை விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டுக்கொண்டிருக்கிறீர்களா?. அப்படியென்றால் இந்த முறை குட்டி கோவா எனப்படும் கோகர்ணாவிற்கு செல்லுங்கள். கோவாவிற்கு சற்றும் குறைவில்லாத அற்புதமான இந்த இடத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

எங்கே இருக்கிறது?

எங்கே இருக்கிறது?

கோகர்ணா கர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சிறிய அழகிய கடற்கரை நகரமாகும்.

கோவாவிற்கு 143கி.மீ முன்னதாகவே கோகர்ணா அமைந்திருக்கிறது.

ctrlw

ஏன் இந்த பெயர் ?:

ஏன் இந்த பெயர் ?:

அகனாஷினி மற்றும் கங்காவலி என்ற இரண்டு ஆறுகள் கோகர்ணாவில் சங்கமிக்கின்றன. இவை சங்கமிக்கும் இடம் பசுவின் காதின் வடிவத்தில் இருக்கிறது. கோ - பசு, கர்ணம் - காது என பொருள்படுகிறது. இதனாலேயே இந்த ஊருக்கு கோகர்ணா என்ற பெயர் வந்திருக்கிறது.

ctrlw

கடற்கரைகள்:

கடற்கரைகள்:

கோவாவில் இருக்கும் கடற்கரைகளுக்கு சற்றும் சளைத்தவை இல்லை இந்த கோகர்ணா கடற்கரைகள். சொல்லப்போனால் கோவா கடற்கரைகளை விட மிகவும் தூய்மையானதாகவும், மனிதர்களால் நிரம்பி வழியாமல் அமைதியானதாகவும் இருக்கின்றன கோகர்ணா கடற்கரைகள்.

Sudharsan.Narayanan

என்னென்ன கடற்கரைகள்:

என்னென்ன கடற்கரைகள்:

கோகர்ணாவில் குட்லே பீச், கோகர்ணா பீச், ஹாஃப் மூன் பீச், பாரடைஸ் பீச் மற்றும் ஓம் பீச் போன்ற ஐந்து கடற்கரைகள் இங்குள்ள முக்கியமான கடற்கரை சுற்றுலா அம்சங்களாக விளங்குகின்றன.

இந்த ஐந்து கடற்கரைகளில் சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் விரும்பப்படுவதும் கோகர்ணாவில் இருக்கும் கடற்கரைகளில் அளவில் பெரியதுமாக இருப்பது குட்லே பீச் ஆகும்.

Christopher Porter

ஓம் பீச்:

ஓம் பீச்:

குட்லே கடற்கரைக்கு அடுத்தபடியாக கோகர்ணாவில் பிரபலமான கடற்கரையாக இருப்பது ஓம் பீச் ஆகும். 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தின் சமஸ்கிரத சொல்லானॐ வடிவத்தில் இருப்பதாலேயே இந்த பெயர் வந்திருக்கிறது.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளால் அதிகம் விரும்பப்படும் கடற்கரையாக இது திகழ்கிறது.

Karthik Dwarakanath

ஓம் பீச்:

ஓம் பீச்:

ஹாஃப் மூன் பீச் என்று அழைக்கப்படும் கடற்கரை ஓம் கடற்கரையிலிருந்து 20 நிமிட நடைப்பயண தூரத்தில் உள்ளது. ஒரு மலையைச்சுற்றிக்கொண்டு இந்த கடற்கரைக்கு வர வேண்டியுள்ளது. அரை நிலாவைப்போன்றே வடிவம் கொண்டுள்ளதால் இது அரை நிலா கடற்கரை என்று அழைக்கப்படுகிறது.

Abhishek Chinchalkar

ஓம் பீச்:

ஓம் பீச்:

ஓம் பீச்சில் அந்தி சாயும் கதிரவனை கண்டு மகிழும் ஒரு வெளிநாட்டுப் பெண்.

Florian Recklebe

எப்போது வரலாம்:

எப்போது வரலாம்:

டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டம் கோகர்னாவிற்கு சுற்றுலா வர சிறந்த நேரமாக சொல்லப்படுகிறது. நண்பர்களுடன் வந்து குறைந்த செலவில் ஆசைதீர கொண்டாடி மகிழ கோகர்ணா மிகச்சிறந்த இடமாகும்.

அது சரி..கோகர்ணாவில் கடற்கரைகள் மட்டும் தான் இருக்கின்றனவா? வேறு எந்த இடமும் இல்லையா என கேட்பவர்கள் அடுத்த பக்கத்திற்கு வாருங்கள்.

ஆத்மலிங்கமாக காட்சி தரும் சிவன்:

ஆத்மலிங்கமாக காட்சி தரும் சிவன்:

கோகர்ணா அதன் கடற்கரைகளுக்காக புகழ்பெறுவதற்கு முன்பாக மிகப்பெரும் ஆன்மீக ஸ்தலமாக மட்டுமே கோகர்ணா இருந்துவந்திருக்கிறது.

இங்கேஇந்தியாவில் இருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் ஒன்றான மகாபலேஷ்வர் கோயில் இருக்கிறது.

ஆத்மலிங்கமாக காட்சி தரும் சிவன்:

ஆத்மலிங்கமாக காட்சி தரும் சிவன்:

உலகில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் ஒன்றான இதில் சிவபெருமான் ஆத்மலிங்கமாக காட்சிதருகிறார்.

மகாபலேஷ்வர் கோயில் தவிர இங்கே மஹா கணபதி கோயில, உமா மகேஸ்வர் கோயில், பத்ரகாளி கோயில், வெங்கட ரமணர் கோயில், தாமரை கௌரி கோயில் ஆகியனவும் பிரபலமான கோயில்களாக திகழ்கின்றன.

Miran Rijavec

இத்தனை அழகா !!

இத்தனை அழகா !!

கோகர்ணாவின் பேரழகை கண்முன் கொண்டு வரும் சில அற்புதமான புகைப்படங்கள்.

Karthik Dwarakanath

இத்தனை அழகா !!

இத்தனை அழகா !!

கோகர்ணாவின் பேரழகை கண்முன் கொண்டு வரும் சில அற்புதமான புகைப்படங்கள்.

Patrik M. Loeff

இத்தனை அழகா !!

இத்தனை அழகா !!

கோகர்ணாவின் பேரழகை கண்முன் கொண்டு வரும் சில அற்புதமான புகைப்படங்கள்.

Sankara Subramanian

இத்தனை அழகா !!

இத்தனை அழகா !!

கோகர்ணாவின் பேரழகை கண்முன் கொண்டு வரும் சில அற்புதமான புகைப்படங்கள்.

Prashant Ram

இத்தனை அழகா !!

இத்தனை அழகா !!

கோகர்ணாவின் பேரழகை கண்முன் கொண்டு வரும் சில அற்புதமான புகைப்படங்கள்.

James Darling

இத்தனை அழகா !!

இத்தனை அழகா !!

கோகர்ணாவின் பேரழகை கண்முன் கொண்டு வரும் சில அற்புதமான புகைப்படங்கள்.

~zipporah~

இத்தனை அழகா !!

இத்தனை அழகா !!

கோகர்ணாவின் பேரழகை கண்முன் கொண்டு வரும் சில அற்புதமான புகைப்படங்கள்.

Andy Wright

இத்தனை அழகா !!

இத்தனை அழகா !!

கோகர்ணாவின் பேரழகை கண்முன் கொண்டு வரும் சில அற்புதமான புகைப்படங்கள்.

Rosario Lizana

இத்தனை அழகா !!

இத்தனை அழகா !!

கோகர்ணாவின் பேரழகை கண்முன் கொண்டு வரும் சில அற்புதமான புகைப்படங்கள்.

Rosario Lizana

Read more about: gokarna karnataka beaches goa
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X