Search
  • Follow NativePlanet
Share
» »உலகில் உயரமான டீ எஸ்டேட்டும், மைனா ஷூட்டிங் ஸ்பாட்டும் "கொழுக்குமலை"

உலகில் உயரமான டீ எஸ்டேட்டும், மைனா ஷூட்டிங் ஸ்பாட்டும் "கொழுக்குமலை"

குளிர் நம்மை ஒட்டிக்கொள்ளும் பரவசம், இதமாக போடி மெட்டு கடந்து பசுமைப் பயணம் என பல அம்சங்களைக் கொண்டுள்ள கொழுக்குமலையில் வேறென்னவெல்லாம் உள்ளது என பார்க்கலாம் வாங்க.

உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் தேயிலை விளையும் ஒரே இடம்தான் கொழுக்குமலை. வருடம் முழுவதும் குளிர்ந்தே இருக்கும் மலைகளின் பட்டியலிலும் இப்பிரதேசம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொள்ளை அழகு கொண்ட குளு குளு கொழுக்குமலை அமைந்திருப்பது தமிழகத்தில் தேனியை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் தான். தேனி- போடி கடந்து மூணாறு சாலையில் பயணித்தால் பசுமையை ரசித்தபடி வளைந்து நெளிந்து செல்லும் போடி மெட்டுசாலை. இங்கே குளிர் நம்மை ஒட்டிக்கொள்ளும் பரவசம், இதமாக போடி மெட்டு கடந்து பசுமைப் பயணம் என பல அம்சங்களைக் கொண்டுள்ள கொழுக்குமலையில் வேறென்னவெல்லாம் உள்ளது என பார்க்கலாம் வாங்க.

பூப்பாறை

பூப்பாறை


தேயிலை மலைத்தோட்டம் நிறைந்த பூப்பாறை கடந்து பெரிய கானல், சின்னக்கானல், அதனருகே ரம்மியமான பரந்து விரிந்து கிடைக்கும் டேம்தான் யானை இரங்கல் டேம். தேக்கடிபோல் தேயிலை மலைகளின் காலடியில் வளைந்து வளைந்து செல்லும் நீண்ட நீர்த்தேக்க அணை. இதனைத் தொடர்ந்து, அடுத்த ஒரு சில கிலோ மீட்டரில் உள்ளது சூரியநெல்லி. கொழுக்குமலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் நுழைவுவாயில்தான் இந்த சூரியநெல்லி.

Jan J George

உயரமான மலைச் சாலை

உயரமான மலைச் சாலை


சூரியநெல்லியில் இருந்து கொழுக்கு மலைக்கு ஜீப்பில்தான் செல்லமுடியும். அவ்வளவு உயரமான மலைச்சாலை. சுற்றியுள்ள சில மலை கிராமங்களுக்கு இன்றைக்கும் குதிரை சுமையாகத்தான் உணவுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கொழுக்குமலைக்குச் செல்வதற்கு முன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலைத் தோட்டங்கள்தான் மலையை ஆக்கிரமித்துள்ளது. அந்த பசுமையோடு குளிர்ந்த மேகக் கூட்டம் நம்மோடு கொஞ்சி விளையாடிக் கொண்டே வரும். அவ்வப்போது சாரல் மழையும் நம்மை கரைந்துவிடச் செய்யும்.

உலக புகழ்பெற்ற தேயிலை

உலக புகழ்பெற்ற தேயிலை


இந்த மலையில் விளையும் தேயிலை உலக அளவில் ஏற்மதி செய்யப்படுகிறது. இயற்கை முறைப்படி தயாராகும் இந்த தேயிலை உற்பத்தியை சுற்றுலாப் பயணிகள் தேயிலைத் தொழிற்சாலைக்குள் சென்று கூட பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருடம் முழுவதும் இப்பகுதியில் தேயிலை உற்பத்தி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

Divyacskn1289

குளுகுளு கொழுக்குமலை

குளுகுளு கொழுக்குமலை


தமிழகத்தில் எந்தப் பகுதி வெயிலில் வாடினாலும் இந்த கொழுக்குமலை தனது காலநிலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஜில்லென்ற சூழலையேக் கொண்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் குளிர்ச்சி மட்டுமே நிலவும். வெயிலைப் பார்க்கவே முடியாது. இதற்காகவே இங்கு ஆண்டுதோறும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம்.

Visakh wiki

ஷூட்டிங் ஸ்பாட்

ஷூட்டிங் ஸ்பாட்


தமிழகம் மற்றும் கேரளத்திற்கு இடையே இரு எல்லைகளையும இணைத்தவாறு உள்ள கொழுக்குமலை தமிழ், மலையாள சினிமாவில் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்டாக திகழ்கிறது. நீங்கள் மைனா படம் பார்த்திருந்தீர்கள் என்றால் தெரிந்து கொள்ளுங்கள், அந்தப் படம் முழுவதும் இங்கேதான் எடுக்கப்பட்டது என்று. இரு மாநில எல்லைப் பகுதி என்பதால் இரு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருவார்கள்.

சிறந்த தேயிலை

சிறந்த தேயிலை


அட்டகாசமான தேயிலைத் தோட்டங்கள் இங்கு உள்ளன. இங்கு உலகிலேயே சிறந்த தேயிலை உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அந்தவகையிலும் கொழுக்கு மலை, குரங்கணி, டாப் ஸ்டேஷன் பகுதிகள் பிரபலமானவை.

Beginner Nandhu

ஓ.பி.எஸ். தொகுதி

ஓ.பி.எஸ். தொகுதி


பெரும்பாலும் அரியப்படாத இந்த கொழுக்குமலை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட பகுதி தான். இப்பகுதியைச் சுற்றிலும் போடி, குரங்கணி, தேனி மாவட்ட பள்ளத்தாக்குப் பகுதிகளையும், கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன் என பசுமையான பகுதிகளையும் பார்த்து ரசிக்கலாம். கட்டிட நெரிசல், வாகன இரைச்சல், வேலைப் பழு இதில் இருந்து தப்பிச்சு மன நிம்மதியை தேடி போறதா இருந்தா இங்க போங்க. உங்களுக்கு இந்த இடம் கண்டிப்பாக நிம்மதியையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

Shanmugam. M

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X