ஹூப்ளியிலுள்ள உள்நாட்டு விமான நிலையம் இந்தியாவின் முக்கிய பெருநகரங்களுக்கு விமான சேவைகளைக் கொண்டுள்ளது. இந்த விமான நிலையம் நகர மையத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது தவிர ஹூப்ளியிலிருந்து 264 கி.மீ தூரத்தில் உள்ள டபோலிம் விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமான சேவைகளுடன் வெளி நாட்டு விமான சேவைகளும் உள்ளன. மேலும் டபோலிம் விமான நிலையத்தில் சிறு வாடகை விமான சேவைகளும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.