Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இகத்புரி » வானிலை

இகத்புரி வானிலை

குளிர்காலமான நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உள்ள காலமே இகத்புரிக்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாகும். இக்காலத்தில் சீதோஷ்ண நிலை மிதமாகவும் இதமாகவும் பயணத்துக்கும் சுற்றிப்பார்ப்பதற்கும் ஏற்றபடி காணப்படுகிறது.

கோடைகாலம்

இகத்புரியில் கோடைக்காலமானது மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை குறுகிய காலமே நிலவுகிறது. எனினும் இக்காலத்தில் உஷ்ணம் மிக அதிகமாகவும் பொசுக்கும் வெயிலும் காணப்படும். எனவே கோடைக்காலத்தில் சுற்றுலாப்பயணம் உவப்பாக இருக்க வாய்ப்பில்லை.

மழைக்காலம்

ஜுனிலிருந்து நவம்பர் வரை நீடிக்கும் மழைக்காலமானது உற்சாகத்துடன் இப்பகுதியில் வரவேற்கப்படுகிறது. கோடை வெயில் உண்டாக்கிய வறட்சிக்கு சரியான மாற்றாக மழைப்பொழிவு விளங்குகிறது. நல்ல கடுமையான மழைப்பொழிவை இகத்புரி பெறுகிறது.

குளிர்காலம்

இகத்புரி பகுதியில் நவம்பர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை குளிர் காலம் நிலவுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 25°C யாகவும் குறைந்தபட்சமாக 14°C யாகவும் காணப்படுகிறது.