தேவி அஹில்யா பாய் ஹோல்கார் விமான நிலையம் வழியாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளுடன் இந்தூர் இணைக்கப் பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து முக்கியமான பல விமான நிறுவனங்கள் தங்களுடைய விமான சேவைகளை அளித்து வருகின்றன. இந்த விமான நிலையத்திலிருந்த நாட்டின் முக்கியமான மெட்ரோ நகரங்களுக்கும் நேரடி விமான சேவைகள் உள்ளன. மேலும், இந்த விமான நிலையத்தின் வசதிகள் மற்றும் கட்டமைப்பு ஆகியவை பாராட்டத் தக்கதாக இருக்கின்றன.