Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இந்தூர் » வானிலை

இந்தூர் வானிலை

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் இந்தூருக்கு சுற்றுலா வர மிகவும் ஏற்ற மாதங்களாகும். இந்நாட்களில் வெப்பநிலை இதமூட்டுவதாக இருப்பதால், அது பார்வையிடுவதற்கு மிகவும் ஏற்ற வகையில் இருக்கும். இந்நாட்களில் இங்கு சுற்றுலா வரும் பார்வையாளர்கள் சுட்டெறிக்கும் வெய்யில் மற்றும் அனல் காற்றை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது.

கோடைகாலம்

இந்தூரில் கோடைக்காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும். ஏப்ரல் முதல் ஜுன் மாதங்களில் வெகு வேகமாக உயரும் வெப்பநிலை, மே மாதத்தில் மிகவும் அதிகமானதாக இருக்கும். இந்நாட்களில் நிலவும் சராசரியான வெப்பநிலையாக 35°C முதல் 40°C இருக்கும். ஆனால், மே மாதத்தில் வெப்பநிலை 45°C வரை அதிகரித்து விடும்.

மழைக்காலம்

இந்தூரில் கோடையின் கடுமை தணிவதை அதைத் தொடர்ந்து வரும் மழைக்காலம் உறுதி செய்யும். இந்தூரில் மழைக்காலம் ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் நிலவுகிறது. இந்த பகுதி தென்மேற்கு பருவக்காற்றின் மூலமாக மிதமான மழைப்பொழிவை பெறுகிறது. இந்தநாட்களில் பொழியும் சராசரி மழைப்பொழிவு 30 முதல் 35 அங்குலமாக உள்ளதால், சுட்டெறிக்கும் கோடைக்கு இது ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.

குளிர்காலம்

இந்தூரில் நவம்பர் முதல் பிப்ரவரி வரையில் நீடிக்கும் குளிர்காலம் மிகவும் சிறந்த சீசனாக உள்ளது. இந்நாட்களில் சராசரி வெப்பநிலை 0°C முதல் 10°C வரையில் உள்ளது. ஜனவரி மாதத்தில் உச்சத்தில் இருக்கும் குளிர்காலத்தில் வெப்பநிலை 2°C வரையிலும் குறைந்து விடும். எனவே குளிர்காலம் இந்தூருக்கு சுற்றுலா வருவதற்கு மிகவும் ஏற்ற பருவமாக உள்ளது.