Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இடார்ஸி » வானிலை

இடார்ஸி வானிலை

இடார்ஸிக்கு அருகில் போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலையம் சுமார் 90 கிமீ தொலைவில் உள்ளது. சர்வதேச விமான நிலையமான இங்கிருந்து பல விமானங்கள் பல்வேறு நகரங்கள் மற்றும் நாடுகளுக்கு  இயக்கப்படுகின்றன. போபாலில் இருந்து சாலை மூலம் இடார்ஸியை அடைய சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் எடுக்கும்.

கோடைகாலம்

இடார்ஸியின் கோடைகாலம் மார்ச் மாதம் தொடங்கி மே மாத இறுதி வரை நீடிக்கிறது. இங்கு கோடைகாலத்தில் வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியஸ் முதல் 47 டிகிரி செல்ஸியஸ்  வரை மாறுபடுகிறது. இங்கு கோடை வெப்பநிலை மே மாதத்தில் தீவிரமடைகிறது. எனவே சுற்றுலா பயணிகள் கோடை காலங்களில் இடர்ஸிக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழைக்காலம்

இங்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை  தொடர்கிறது. பருவ மழைக் காலத்தில் குறைந்து விடும் வெப்ப நிலை கோடை காலத்தில் வெப்பத்தால் தவித்த மக்களுக்கு இதம் அளிக்கிறது. இங்கு பருவ மழை காலத்தில் போதுமான அளவிற்கு மழை பெய்கிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் மிதமான மற்றும் இதமான வானிலை நிலவுகிறது.

குளிர்காலம்

இங்கு குளிர்காலம் டிசம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி இறுதி வரை நீடிக்கிறது. குளிர்காலத்தின் அதிக பட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை முறையே 24 டிகிரி செல்ஸியஸ் மற்றும் 9 டிகிரி செல்ஸியஸ் ஆகும். இங்கு  குளிர்காலத்தில்  லேசான மற்றும் இதமான வானிலை நிலவுகிறது. ஆகவே இடார்ஸியை சுற்றி பார்பதற்கு  குளிர்காலமே மிகவும் சிறந்தது.